காதல் - அடுத்த நிலை
நம் அறை
சிறப்பு ஒன்றுமில்லை
தலையணையில் உன் மணம்
உன்னையே உணர்த்துகிறது
கட்டியணைக்க இரு கரங்கள் போதாது
என் மனத்துடிப்பும் அடங்காது
காதல் காமமாய் ஊற்றெடுத்து
உனைத் தழுவ காத்திருக்கிறது
நாணம் கொள்ளவில்லை
நகைக்கவும் இல்லை
உன் அருகமையை
உன் நெருக்கத்தையே
எண்ணி ஏக்கம் கொண்டேன்…