மாம்ஸ்

கண்டேன் கண்டேன்
உன் பெண்ணை ஈரக் கூந்தலுடன்..
கொண்டேன் கொண்டேன்
ஒரு தலைக் காதலை ஆவலுடன்..
உன் செயல் கொண்டு
அவளை சிரிக்கவைத்தாய்- அதனை
என் கயல் கொண்டு
அவளை ரசிக்கவைத்தாய்
நீ என்னை அமர சொல்லி
இடம் தான் கொடுத்தாய்
அவள் என்னை அதட்டி அமரவைத்து
என் மனதுள் இடம் பிடித்தாள்
அவளுக்கு பிடிக்காத அத்தேநீரை
பருகும்போது..
டம்பளர் கூட என் உதட்டை சுட்டுவிட்டது..
அதனுடன் என் மனம்
தேநீர் பழக்கத்தையே அடி விட்டுவிட்டது
உன் புதல்வியின் மழழைச் சொல் கேட்ட போது
என் செவியினுள் காதல் யாழ் மீட்டுகிறது..
அவள் குணம் கண்டு - என்
மனம் ரசிக்கிறது..
ஆதலினால் மணம் செய்ய - என்
மனம் துடிக்கிறது..
காதல் சிறகை விரிக்கிறது..
என்ன பண்ண?
சொல்லு மாம்ஸ்?......

எழுதியவர் : சரவணன் சா உ (1-Mar-21, 4:41 am)
சேர்த்தது : சரவணன் சா உ
பார்வை : 75

மேலே