கண்களே சொல்லும்

நேரிசை வெண்பா

எதையும் பறையடித்து செய்திசொல்வர் ஊரில்
அதைப்போல் பறையாமென் கண்கள் - எதையும்
மறைக்காப் பிரிந்தகாத லன்பற்றி சாற்றும்
பறையூர்கு மென்விழிக ளும்


செய்தி அறிவிக்க ஊரில் பறையடித்து அறிவிப்பார்.
பறையைப்போலவாம் எனது கண்களும். எனது கண்களைப்
பார்த்தே வூர்மக்கள் யென் காதலர் ஊரில் இருக்கிறாரா
இல்லையா என்பதை அறிந்து கொள்வார்கள்.

குறள். 10 /. 10

...........

எழுதியவர் : பழனிராஜன் (1-Mar-21, 7:20 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : kangale sollum
பார்வை : 368

மேலே