அவளுக்காக

உனக்காக ஒரு கவிபாட எண்ணினேன்!
வார்த்தைகளைத் தேடித் தேடி
வாழ்க்கை போய்விடும் என அஞ்சினேன்!!
உனைப் பாட நான் எண்ணும் போதெல்லாம்
உன் முகம்! என் நினைவில் வந்து மடைமாற்றும் !!
பலகோடி வார்த்தைகள் உண்டென்பர் தமிழில்!!
கசடறக் கற்காத காரணம் தானோ ?
நான் உனை வர்ணிக்க
யாசிக்கிறேன் தமிழன்னையிடம்!!!

எழுதியவர் : ராஜேஷ் M நாயர் (17-Mar-21, 9:25 am)
Tanglish : avalukkaka
பார்வை : 344

மேலே