Rajesh M Nair - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Rajesh M Nair |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 11-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 206 |
புள்ளி | : 26 |
வேதனையும், வலிகளும்
வந்து வந்து போகும் !!!
மகிழ்ச்சியும், பூரிப்பும்
மாயமாய் போகும் !!!
எதுவும் நிலையில்லை !!!
எதுவும் நிலையில்லை !!!
நமக்கான இன்பத்தை நாமே உருவாக்க;
தித்திக்கும் நினைவுகளை
அதுவே நமக்களிக்கும் !!!
உனக்காக ஒரு கவிபாட எண்ணினேன்!
வார்த்தைகளைத் தேடித் தேடி
வாழ்க்கை போய்விடும் என அஞ்சினேன்!!
உனைப் பாட நான் எண்ணும் போதெல்லாம்
உன் முகம்! என் நினைவில் வந்து மடைமாற்றும் !!
பலகோடி வார்த்தைகள் உண்டென்பர் தமிழில்!!
கசடறக் கற்காத காரணம் தானோ ?
நான் உனை வர்ணிக்க
யாசிக்கிறேன் தமிழன்னையிடம்!!!
Atlee next movie committed with thalapathi....
முழுக்க முழுக்க கற்பனை மட்டுமே....
நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் ஐம்பது பைசாவில் கால்டாக்ஸியில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக போராடி கடைசியில் எப்படி ஜெயிக்கிறார் என்பதை இதுவரை யாரும் சொல்லப்படாத கதைக் கோணத்தில் அட்லி தளபதிக்கு கதை கூறியுள்ளார். அதன் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் பெயர் என்ன என்பதை கூறியுள்ளார். " காரரை போற்று" என்னும் தலைப்பை படத்திற்கு சூட்டியுள்ளார். நிரூபர் ஒருவர் " எதுக்கு தொடர்ச்சியா தளபதி வச்சே படம் எடுக்குறீங்க" என்ற கேள்விக்கு இட்லி ஆவியாகி மண்ணிக்கவும் அட்லீ கோபமாகி " எங்க அண்ணனுக்கு நான்தான்டா
பெருங்குற்றம் செய்தேனே என் தலைவா !!
என்ன வினை நீ செய்தாய் என்று அவர் வினவ ?
நான் சொன்னேன் -
அனைவரையும் நான் கண்டேன் ஒருபோல என்றுரைத்தேன் !!!
அவர் சொன்னார் -
மனிதத்தால் நீ காண்பது தவறில்லை !!!
மறித்து குணத்தால் ஒருபோல காண்பது உன் தவறென்றார் !!!
(ஈசனுக்கும் எனக்குமான கவிதை நடையில் அமைந்த உரையாடல்)
நகைப்பில் தோன்றும்
இரு சுந்தரக் குளங்கள் !!!
"உன் கன்னக்குழிகள்"
மகா கவிக்கு பிறந்தநாள்!!!
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
- அய்யன் திருவள்ளுவர்!
மகிழ்ச்சியின் வாயில்களாய்,
அன்பிலும் மகிழ்ச்சி,
அரவணைப்பிலும் மகிழ்ச்சி!!!
நன்றி பெறுவதிலும் மகிழ்ச்சி,
தான் பெற்ற உதவிக்கு நன்றி-
உரைப்பதிலும் மகிழ்ச்சி!!!
வாயில்கள் பலவாயினும்,
இலக்கு ஒன்றே அதுவே மகிழ்ச்சி!!!
நகைத்தலும் ஒருவித மகிழ்ச்சி,
ஆர்ப்பரிப்பால் அழுவதும் மகிழ்ச்சியே!!!
பச்சிளம் பிள்ளை மகிழ,
நாம் எடுக்கும் முயற்சியும் இறுதியில் மகிழ்ச்சியே!!!
மகிழ்ச்சியின் முயற்சி அது என்றென்றும் " மகிழ்ச்சியே "
பெண் ஒரு கற்பூரம்
************************************
பெண்ணவளும் ஒருவகையில் கற்பூரமே
அன்னவளும் அங்காடிப் பொருள் ஆக
முன்னவளோ பின்னவளோ நாமறியோம்
அன்னவளும் என்னவளாய் நல் நேர்ந்து
இனியவன் இவனுக்காய் கரையவே-- இவன்
கண்ணவளே என்றும் என்ற
தன்னிலை மறந்த ஓர் நிலை
தந்தாய் என் தலைவா!!!
தாயும், தந்தையும், குருவும், இறையும்
நீ எனக்கானாய் என் தலைவா!!!
என் பித்தம் தெளிவாக்கிய,
சித்தனே என் தலைவா!!!
வேனலில் கானல் வரும்!
கானலில் நீரும் வருமோ???
கானலும், மெய்நீரான அதிசயத்தை
எனக்கருளினாயே என் தலைவா!!!
தேவையில்லா புலம்பல்களில் கட்டுண்ட என் மனத்தை,
மீட்டுத்தந்தது உன் நாமமே என் தலைவா!!!
ஒரு தலையோ ! இருதலையோ!!
காதல் வந்துவிட்டால், ஊனும் இல்லை,
உறக்கமும் இல்லை,
இவையனைத்தும் எனக்கும் பொருட்டில்லை,
உன்மீது நான் கொண்ட காதலால் என் தலைவா!!!
பிரணவத்துடன் உன் நாமம்,
ஐந்தெழுத்து திரு நாமம் உச்ச