அட்லி சுடும் இட்லி
Atlee next movie committed with thalapathi....
முழுக்க முழுக்க கற்பனை மட்டுமே....
நாட்டில் வாழும் மக்கள் எல்லோரும் ஐம்பது பைசாவில் கால்டாக்ஸியில் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக போராடி கடைசியில் எப்படி ஜெயிக்கிறார் என்பதை இதுவரை யாரும் சொல்லப்படாத கதைக் கோணத்தில் அட்லி தளபதிக்கு கதை கூறியுள்ளார். அதன் பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் பெயர் என்ன என்பதை கூறியுள்ளார். " காரரை போற்று" என்னும் தலைப்பை படத்திற்கு சூட்டியுள்ளார். நிரூபர் ஒருவர் " எதுக்கு தொடர்ச்சியா தளபதி வச்சே படம் எடுக்குறீங்க" என்ற கேள்விக்கு இட்லி ஆவியாகி மண்ணிக்கவும் அட்லீ கோபமாகி " எங்க அண்ணனுக்கு நான்தான்டா பன்னுவேன்" எனக் கோபமாக நிரூபரிடம் கூறினார். பிறகு மற்றும் ஒரு நிரூபர் மிகவும் சாந்தமாக " படத்துல தளபதிக்கு எதும் பஞ்ச் டைலாக்ல இருந்து ஒன்னே ஒன்னு சொல்லுங்க தளபதி ரசிகர்களுக்காக" என கேட்க அட்லீ கூறினார் ஒரு பஞ்ச்..... வில்லனை பார்த்து "ரோடு என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா?...." என்ற ஒரு சிறந்த பஞ்ச் தளபதிக்கு வைத்துள்ளேன். இந்த படம் ஆஸ்கார் அவார்டு வாங்க வேண்டும் என படத்தின் ஒரு சீன் கூட லீக் ஆகக்கூடுது என்பதற்காக ஜப்பான் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து மிகச்சிறந்த பிளம்பிங் டெக்னீசியன் வர வைக்கப்பட்டுள்ளார்கள். "கதையை படம் திரைக்கு வரும் வரை யாரும் கனிக்க முடியாது" எனக்கூறி பேட்டியை முடித்தார் ஜெட்லி மண்ணிக்கவும் அட்லீ.