மகிழ்ச்சியின் முயற்சி

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
- அய்யன் திருவள்ளுவர்!

மகிழ்ச்சியின் வாயில்களாய்,
அன்பிலும் மகிழ்ச்சி,
அரவணைப்பிலும் மகிழ்ச்சி!!!
நன்றி பெறுவதிலும் மகிழ்ச்சி,
தான் பெற்ற உதவிக்கு நன்றி-
உரைப்பதிலும் மகிழ்ச்சி!!!
வாயில்கள் பலவாயினும்,
இலக்கு ஒன்றே அதுவே மகிழ்ச்சி!!!
நகைத்தலும் ஒருவித மகிழ்ச்சி,
ஆர்ப்பரிப்பால் அழுவதும் மகிழ்ச்சியே!!!
பச்சிளம் பிள்ளை மகிழ,
நாம் எடுக்கும் முயற்சியும் இறுதியில் மகிழ்ச்சியே!!!
மகிழ்ச்சியின் முயற்சி அது என்றென்றும் " மகிழ்ச்சியே "

எழுதியவர் : ராஜேஷ் M நாயர் (15-Nov-15, 1:21 am)
பார்வை : 425

மேலே