மீண்டும் மீண்டும்

மீண்டும் மீண்டும்

வெற்றியைத் தொலைத்து
தோற்றுப் போகும்
ஒவ்வொரு கணங்களிலும்
மீண்டும் மீண்டும்
தன்னம்பிக்கையென்னுள்
வாழ்த்துச் சொல்கின்றது..

வறுமை வசந்தமழித்து
வாழ்வைத்
துவம்சம் செய்கையில்..
உழைப்பின் வேட்கை
மீண்டும் மீண்டும்
உயிரணுக்களை உரசிச் செல்கின்றது..

எதிர்பார்ப்பின் தேடலில்
ஏமாற்றங்கள் வீழ்கையில்...
மீண்டும் மீண்டும்
முயற்சியின் முகவரியில்
மனம் தொற்றிக் கொள்கின்றது.

இன சன விரோதங்கள்
விண் பிளக்கும் யுத்தங்கள்
மனித வுயிரை
வேள்வியாக்கையில்..
சமாதானம் வேண்டி..மனம்
யாகத் தீயில்
மீண்டும் மீண்டும் குளிக்கிறது.

கவலைகள் வருகையில்
அழும் விழிகளைக் துடைத்திடும்
விரல்களில்
விழுந்து கிடக்கின்ற
மகிழ்வின் ரேகைகள்
மீண்டும் மீண்டும்
கற்றுத் தருகின்றது
மகிழ்ச்சியான வாழ்வை

..அன்புடன் அமீர் மொனா..

எழுதியவர் : மீண்டும் மீண்டும் (14-Nov-15, 7:40 pm)
Tanglish : meendum meendum
பார்வை : 192

மேலே