மகிழ்ச்சியின் முயற்சி

மகிழ்ச்சியின் முயற்சி
........
வாழ்வின் அழகான தேடல்
மகிழ்ச்சி...
அதனை யாளும் குணங்கள்
முயற்சி..
நம் ஒவ்வொரு முயற்சியிலும்
முடிச்சவிழ்க்கும்
பொக்கிஷமாய்
மகிழ்வின் வருடல்.
எண்ணங்களின் பலம்
வெற்றி...
மனம்
தோற்றுப் போகும் போதெல்லாம்
தொட்டுக் கொள்ளட்டும்
மகிழ்ச்சியின் முயற்சியில்..
இரவின் வெறுமையில்
சயனித்திருக்கும்
ஆழ்மனம்
லட்சிய வேட்கை
தொட்டுணரும்
மகிழ்ச்சியின் முயற்சிக்குள்
முக்காடிடட்டும்..
சலனங்கள்
சாக்கடைக்குள் வீழ்த்தும்போது
விலகாத
விழுமியங்களில்
மகிழ்ச்சி முயற்சிக்கட்டும்..
அன்புடன் அமீர் மோனா....