மீண்டும் மீண்டும்
கடலின் நீலம் கண்டும்
கரையின் நீலம் காண
கரைந் தலையும் அலையும்
சீறிப்பாய சிறகுகள் இருந்தும்
சந்திர உலகம் காண
சாயாத ஒற்றைகால் கொக்கும்
கூர்மையான கொம்புகள் இருந்தும்
வாழ்வின் நிம்மதியை காண
புலிக்கு முன்னால் ஓடும் மானும்
தோல்வியிலிருந்து மீண்டும்
மீண்டும் தோல்வியையே சந்திக்கின்றன
என்னைப் போல
தோல்வியை தோழமையாக கொண்டுள்ளன
-- கண்ணீருடன்
கபேஷ்