மகிழ்ச்சியின் முயற்சி

விதைக்குள் விருட்சம்
ஒளிந்திருப்பது போல
முயற்சிக்குள் மகிழ்ச்சி
ஒளிந்திருக்கிறது

விதைக்கப்பட்ட
வியர்வைத் துளிகள்தான்
மகிழ்ச்சியின்போது
ஆனந்த கண்ணீராக
கண்களில் மலர்கின்றன

விதியின் வசமல்ல
வாழ்க்கை
வியர்வையின் வசமே
வாழ்க்கை

மூட்டையை முதுகில்
தூக்கும்போது
உள்ளிளுக்கும்
முயற்ச்சியின் மூச்சுக்காற்றே
மகிழ்ச்சியை வரவழைக்கும்
மந்திரக்காற்று

நம்பிக்கைகள்
நசுங்கிவிடாமல் காப்பது
முயற்சிக் கவசமே

மகிழ்ச்சியின் வாசலை
முயற்சியின் கரங்களே
முட்டி மோதி
திறக்கின்றன.

எழுதியவர் : ஆ.ஜான் பிராங்ளின் (16-Nov-15, 8:27 pm)
பார்வை : 327

மேலே