வின் ஞானம்
வின் ஞானம்!
விரிந்த ஞானம்
பரந்த ஞானம்..
வின் ஞானம்!
மண் ஞானம்
எஞ்ஞானம்?.
இந்த
வின் ஞானமுன்?
கற்பனை உலகத்தில்
சொப்பன ராக்கெட்டில்,
மேகத்தின்
மேல் நிலையை
எட்டி பிடித்தேன்!
காந்தி மகாத்மாவையும்
மாமனிதன் மண்டேலாவையும்
கண்டுவந்தேன்!
கண்களை துடைத்து
செய்தி
ஒன்று சிதறினார்கள் :
'மதி கெட்ட மானிடர்காள் :
உங்களுக்கு ஓர்
எஞ்ஞானம்.
கருப்பு மனிதனுக்கும்
சிகப்பு குருதிதான்!
சிகப்பு மனிதனுக்கும்
நிழல்கள் கருப்புதான்!
வண்ணங்களிலல்ல வாழ்க்கை..
தூய எண்ணங்களில்!
வின் ஞானம்
தெரிந்தோர்க்கும்
மனித ஞானம்
தெரியவில்லை!
மனித ஞானம்
இருப்போரை
மக்கள் மதிப்பதில்லை!
இரண்டு கால்களுடன்
நடமாடும் மிருகங்களே?
நயமாக உலா வரும்
நான்கு கால் அறிவாளிகளிடம்
கொஞ்சம்
அறிவை
கடனாக வாங்கி
பொன் ஞானத்தை
பெருங்கள்! "
முழித்தேன்!
மடிந்தேன்!