மீண்டும் மீண்டும்
மீண்டும் மீண்டும்
வேண்டும் இங்கு
மானுடனாக ..
கருவின் உருவாய்
நீர்குமிழ் மீனாய்
வளர்ந்திட வேண்டும் .
மடியில் தவழும்
மழலையாக ..
கோதையர் கொஞ்சும்
குழந்தையாக ..
தாய்மையை போற்றும்
தனயனாக ..
தர்மத்தை காக்கும்
கர்ணனாக ..
வீரத்தின் சாயலில்
பார்த்திபனாக ..
மீண்டும் வேண்டும்
மானுடனாக ..
மக்களை வென்ற
கலைஞனாக ..
உலகம் போற்றும்
அறிஞனாக ..
எழுத்தில் தேர்ந்த
கவிஞனாக ..
மதங்களை கடந்த
மனிதனாக ..
மீண்டும் வேண்டும்
மானுடனாக ..
மலரில் ஊரும்
வண்டாக ..
மலையில் திரளும்
நதியாக ..
வானுயரம் தொடும்
மரமாக ..
நிலத்தில் விரிந்த
போர்வையாக ..
உயிர்கள் புசிக்கும்
கனியாக ..
மீண்டும் வேண்டும்
மானுடனாக ..
துள்ளி ஓடும்
மானாக ..
தூறல் போடும்
முகிலாக ..
கண்ணை கவரும்
மலராக ..
தாவி போகும்
முயலாக ..
சின்னஞ்சிறு
அணிலாக ..
மீண்டும் வேண்டும்
மானுடனாக ..
போட்டிக்கவிதை