திருட்டுப்போகும் திருடன்
வேலைக்காரர்மேல் திருடனாய்
விழிவைப்பது என் வழக்கம்;
கண்ணிமைப்பொழுதிலுங்கூட
களவுசெய்திடுவார்களென்று...
எண்ணிலா வேறுபல திருடரோ
என்னுறவென்றுநம்பவைத்து
என்னோடே உண்டுக்குடித்து
என் விருந்தோம்பலை ருசித்து
தங்கம்வைரங்களைத் திருடியபின்
தொட்டுத்தழுவியெனையணைத்து
கட்டிப்பிடித்துக்கால்களில்வீழ்ந்து
கனிந்துருகிவிடைபெற்றுச்சென்றும்
திருடர்களென அவர்களை மட்டும்
தெளிவாகத் தெரிந்துகொள்ளும்
திராணியில்லாமைதானோ - என்
தவறும் தீர்ப்புகளுக்குக்காரணம்...???