Christuraj Alex - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Christuraj Alex |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Mar-2021 |
பார்த்தவர்கள் | : 142 |
புள்ளி | : 114 |
காணாமற்போனோரின்
பட்டியலில்
உன் பெயரும்
என் பெயரும்.
கறுப்புக்கட்டில்களாய்க்
கொடுங்கனவொன்று எனை எழுப்பியது
கல்லறைகளின் ஊர்வலம்
என் தேசத்தின் பாச-நேச இராணுவ மேஜர் அவனை உடனடியாய் வரவழைக்கையில் ஓர் இந்திய இராணுவ வீரனென்ற பெயரில் அவன் மறுத்து எதுவும் உரைக்கத்தான் கூடுமோ? இன்று மணந்த மணமகள்; பூவுடன், பொட்டுடன், மாங்கல்ய மங்களத்துடன்; சலங்கையுடன், மோதிரத்துடன், விரல்-மெட்டியுடன்; நெற்றிக்குங்குமம் கோலாகலத்துடன்; மாறா நறுமணத்துடன்; முழு நிலவாய் எனினும் இன்னும் தேனிலவே கொண்டாதோராய்... இன்னும் ஒருவரொருவரை நேசித்தும் வாசிக்காதோராய்...
கண்ணீரை மறைக்க முடியாதவளாய் அவளும் கவலையை வெளிக்காட்ட இயலாதவனாய் அவனும்...
சென்றான்...
அவள்...?
மூடப்பட்ட 'பெட்டி'
மூவர்ணத்துடன் முகாரி ராகத்துடன்...
கலங்கிப்போய் ஓர் கழுகு
(ஹைபுன் ர
சிரித்து சிரித்தே உன் முழு
சீர்வரிசைப் பட்டியலை என்
சட்டைப்பையில் வைத்தாய்;
சொன்னபடியே வாங்கினேன்
சிறிதும் குறைவு படாமல் என்
சீர் வரிசைக்காக சிரித்து-சிரித்தே...
சுட்டுப்போட்டிருந்தால்
சீக்கிரம் செத்திருப்பேன்;
புன்னகைத்தபடியே எனைப்
பொசுக்கி மகிழ்கிறாயே....
'தேசியம்' என்பதைத்
தேடித் திரிகையில்
கொடிகளைக்கவுரவமாய்க்
காட்டிச் சிரிக்கிறார்கள்...!
நெடிது நீண்டு மினுக்கும் சடையில்
வாசம்மிகு வட்டப் பூவைச் சூட்டி
ஏற்றம் இறக்கமாய் எழில் நடையில்
தோழி ஒருத்தியுடன் வீதியில் நீ
அசைந்து வரும்போது சுழலும் புவியும்
சுற்றுதலை மறந்து நிலைத்து உன்னுடைய
எழிலைக் கண்டு மலைத்து பார்த்ததடி
ஆற்றில் நீ மூழ்கி குளிப்பதை பார்த்த
அழகில் வளர்ந்த ஆற்றோர சோலையின்
பூவினங்கள் யாவும் உன்னை காணவேண்டியே
ஒற்றைக் காலிலே நின்று தவஞ்செய்து
ஆவலில் ஆராவரமாய் உள்ளதடி பெண்ணே
----- நன்னாடன்.
மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!
காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .
பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!
வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!
தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ