தாகம் தணியாமல்
என் தேசத்தின் பாச-நேச இராணுவ மேஜர் அவனை உடனடியாய் வரவழைக்கையில் ஓர் இந்திய இராணுவ வீரனென்ற பெயரில் அவன் மறுத்து எதுவும் உரைக்கத்தான் கூடுமோ? இன்று மணந்த மணமகள்; பூவுடன், பொட்டுடன், மாங்கல்ய மங்களத்துடன்; சலங்கையுடன், மோதிரத்துடன், விரல்-மெட்டியுடன்; நெற்றிக்குங்குமம் கோலாகலத்துடன்; மாறா நறுமணத்துடன்; முழு நிலவாய் எனினும் இன்னும் தேனிலவே கொண்டாதோராய்... இன்னும் ஒருவரொருவரை நேசித்தும் வாசிக்காதோராய்...
கண்ணீரை மறைக்க முடியாதவளாய் அவளும் கவலையை வெளிக்காட்ட இயலாதவனாய் அவனும்...
சென்றான்...
அவள்...?
மூடப்பட்ட 'பெட்டி'
மூவர்ணத்துடன் முகாரி ராகத்துடன்...
கலங்கிப்போய் ஓர் கழுகு
(ஹைபுன் ரக கவிதை)