பிர சவத்தின் வலி
நீ உண்ண நான் பட்டினி கிடந்த நாட்கள் கூட எனக்கு வலிக்கவில்லை போட்ட முதல் எல்லாம் பொய்யாய் போனது கூட எனக்கு வருத்தமில்லை சேற்றில் கிடந்து உழைத்து உடல் இறுகியது தவிர மனம் இறுகவில்லை நீர் எல்லாம் மாயமாகியும் நெஞ்சில் ஈரம் வற்றவில்லை இன்று எனக்கு கடன் கொடுத்த அனைவரும் "திருப்பித்தர வக்கில்லையா ?" என்று கேட்கும் போது தன்மானம் தாங்கமுடியாத வலியைத்தருகிறது மானம்கூட செத்துபோனது பாழாய்ப்போன வயிறு பசியை தந்து கொல்கிறது அது கூட பொறுத்துகொண்டேன் இன்று உணவை குப்பையில் கொட்டுவதைக்கண்டு மரணவலி என் மனதில்........
அது தாயின் பிரசவ வலி அல்ல தாய் தன் குழந்தை சவமாவதை காணும் வலி இன்னுமும் கொல்லாதீர்கள் உங்கள் பாதம் தொட்டு கேட்கின்றேன்
அது ஆகாரம் மட்டும் அல்ல உயிர்களின் ஆதாரம்!