அசோக் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  அசோக்
இடம்:  அழகப்பபுரம்
பிறந்த தேதி :  11-Jun-2000
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Feb-2021
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  10

என்னைப் பற்றி...

நான் கவிதைகளின் தீராக்காதலன்!!!

என் படைப்புகள்
அசோக் செய்திகள்
அசோக் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2021 7:18 pm

என்னுடன் பேசுகிறாள் காதல்
என்னுடன் மட்டும் பேசுகிறாள் காதல்
என் சோகத்தில் நிற்கிறாள் காதல்
என்னை பார்த்து சிரிக்கிறாள் காதல்
என்னை எப்போதும் மதிக்கிறாள் காதல்
தன்னை பற்றி பேசுகிறாள் காதல்
என்னை பற்றி கேட்கிறாள் காதல்
முன்னாள் நிற்கிறாள் காதல்
நான் முன்னேற நினைக்கிறாள் காதல்
என
நினைத்து நினைத்து இழந்தேன் அவளை
காதலியை அல்ல
தோள்கொடுத்த நல்ல தோழியை !!

மேலும்

அசோக் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2021 6:26 pm

உன் கதிர்வீச்சு பார்வை முன் ஹிரோஷிமாவாய் ஆக்கினாய் என்னை
உடன் நிவாரணமாக பெற்றுக்கொள்ளவா உன்னை!

மேலும்

அசோக் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2021 6:10 pm

அவனைப்போல் இவனைப்போல்
என்று எவன் போலவோ வாழ்கிறாய் நீ யார் ?
இவன் உயர்வு இவன் தாழ்வென்று ஒரு மனிதனை நீ ஒதுக்குகிறாய்
நீ எவ்விதத்தில் உயர்ந்தவன் ?
செய்ய நினைப்பதை செய்துமுடிப்பவன் வீரன்
எவனோ நினைப்பதை எல்லாம் செய்பவன் மூடன்
எதை செய்தாலும் கேள்வி என்ன செய்தாலும் கேள்வி
உனக்கென்னடா என்று தான் மனம் கேட்கிறது
உன்னையும் கடந்து செய்வேன் அதை!!!!!
கேள்வி கேட்காமல் எவன் சொல்வதும் செய்யாதே
கேள்வியே கேட்டாலும் வேண்டும் என்பதில் விலகாதே
கோட்பாடுகளை பின்பற்றியது போதும்
உனக்கான கோட்பாட்டை உருவாக்கு நாளும்
உரிமைகள் அதை எடுத்துக்கொள் பிடுங்க தேவை இல்லை
உணர்வுகள் அதை வெளிக்காட்ட வேண்டியதில்லை
கோபப்படுத

மேலும்

அசோக் - அருள் ஜீவா அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2019 5:21 pm

தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?

மேலும்

இருக்கிறது 30-Mar-2021 10:02 am
சந்தேகமாக உள்ளது 14-Dec-2020 7:55 pm
அசோக் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Mar-2021 8:18 pm

தேன் கொட்டினா வலிக்கும் ... பாம்பு கொட்டினா வலிக்கும்... முடி கொட்டினா வலிக்குமா?

ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம், காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்... பிளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியுமா?

பொங்கலுக்கு கவர்மெண்ட்டுல லீவு கொடுப்பாங்க... ஆனா இட்லி, தோசைக்கு கொடுப்பாங்களா?

லைப்ல ஒண்ணுமே இல்லனா போர் அடிக்கும். தலையில ஒண்ணுமே இல்லனா கிளார் அடிக்கும்

ஏழு பரம்பரைக்கு உக்காந்து சாப்பிட பைசா இருந்தாலும், பாஸ்ட் ஃபுட் கடையில நின்னுக்கிட்டுதான் சாப்பிடணும்..

மேலும்

அசோக் - சிவனேஸ்வரி மோகன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jan-2021 10:42 pm

வணக்கம் சகோதர சகோதரிகளே,
சிறுகதை, கட்டுரைப் படைப்புகளை எவ்வாறு பதிவிடுவது ?

மேலும்

எழுது என்பதில் சென்று பாருங்கள் 29-Mar-2021 7:25 pm
தாய்மையும் பெண்மையும் நம்மை ஈன்றெடுத்த "தாய்" அவள் அன்றைய நாளில் நமக்காக அனுபவித்த சில மணி நேர சித்ரவதை, அந்த வலியையும் உதாசினப்படுத்தும் பொழுது தாய்மையை உணர்கிறாள்....! 24-Jan-2021 12:16 am
அசோக் - அசோக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2021 6:47 pm

அவள் விழுந்ததை ஊரே கண்டது
யாரும் உதவிக்கு வரவில்லை!
அவள் அழகை எல்லோரும் ரசித்தனர்
யாரும் நெருங்க நினைக்கவில்லை!அழும்போதுகூட அவள் அழகுதான்! எல்லோருக்கும் அவள் மேல் காதல்
ஆனால் கூறுவதற்குள் ஓடி மறைந்து விட்டாள்
................................. மழை.....................................

மேலும்

அசோக் - அசோக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2021 2:18 pm

வேறெங்கும் கிடைக்காத குறைந்த விலையில்
எங்கள் உரிமைகள் இங்கு மொத்தவியாபாரத்திற்கு!!
வாழ்க்கை நட்டம் எங்களுக்கு
வாரிசுகளுக்கெல்லாம் சொத்துகள் உங்களுக்கு!!!

மேலும்

அசோக் - அசோக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2021 2:04 pm

தேர்தல் நாள் இது
ஒருமுறை உன் ஓட்டை கொன்று ஐந்தாண்டு கண்ணீர் விடும் நீண்ட இழவு நாள்
வறுமையில் பொருளை விற்றவனை வழியில்லாமல் உரிமையை விற்க வைக்கும் நாள்
5௦௦ ரூபாய்க்கு அதிகாரத்தை இழந்து உன்னை ஊனமாக்கும் நாள்
வந்தவரை எல்லாம் வாழ வைத்தவனை எலும்புத்துண்டுக்கு காத்திருக்கும் நாயாய் ஆக்கிய நாள்
மறுபடியும் ஒருமுறை நீ எல்லாம் மறந்து சொரணையற்று நிற்கும் நாள்
மெய்யில்லா வார்த்தைகளை கேட்டு உன் விரல் மையிடும் நாள்
எவனும் சரியில்லை என்று சொல்பவனே நீ சரியாகிக்கொள் இல்லையெனில்
உன் மூச்சுகாற்றுக்கும் வரி விதிப்பான்
எல்லாரும் ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்பவனே நீ யார் என்று கேட்டுக்கொள்
ஆட்சியில் திட்டிவிட்டு

மேலும்

அசோக் - அசோக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2021 9:39 pm

பேசாமல் இருக்கும் போது சொல்வதை
புரிந்தவள்
பேச நினைக்கும்போது எங்கேயோ மறைந்தாய்
உன் வார்த்தைகளை அவமதித்தும் என்னை மதித்தாய்
இன்று மதிக்க நினைக்கும்போது என்னை தனிமையில் விதைத்தாய்
பேசத்தெரியாத போது பேசக்கெஞ்சினாய்
இன்று கவிதை எழுதுகிறேன் காணாமல்போய்விட்டாய்
சொல்ல பயம் இருந்தபோது சொல் என்றாய் கண்களால்
சொல்ல நினைக்கும் போது நில் என்றாய் உன்னை விட்டு தூரமாய்!!!!
எப்படியோ காலம் போய்விட்டது
தேடிவருவேன் உன்னிடம் அதுவரை எப்படி பாதுகாப்பேன் இவ்வுயிரை குழப்பங்களுடன்
தனிமையில் நான்!

மேலும்

அசோக் - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Mar-2021 8:46 am

எனது நண்பி ஒருவரை காதலிக்கிறாள் ஆனால் அவருக்கு வேறு ஒருவருடன் காதல் இருப்பது தெரிந்தும் இவளால் அவருடன் ஒரு நாள் கூட பேசாமல் இருக்க முடிவதில்லை எனது நண்பி காதலிக்கும் நபரின் காதலி ஒரு கட்டத்தில் அவரே தேவையில்லை என்று வேறு காதலை தேடி சென்ற போது அவருக்கு நல்ல தோழியாகவும் நல்ல தாயாகவும் இருந்து பார்த்துள்ளால் அந்த கால கட்டத்தில் அவளுக்கே தெரியாமல் அவளது ஆழ் மனதில் உண்டாகி விட்ட காதல் அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்த பின் அவளுடைய காதலை நினைத்து இன்று வரை (ஒரு வருடம் ) அழது கொண்டிருக்கிறாள் அவளுடைய காதலை இழக்க முடியாமல் அதே நேரம் அவர்களை பிரிக்கும் எண்ணம் துளியுமில்லை  அந்த நபரும் அவள் அவரை காதலிப்பது

மேலும்

முயற்சி செய்து கொண்டிருக்கிறாள் அனைத்தையும் மறைத்து வாழ மிக்க நன்றி 09-Apr-2021 1:51 pm
என் தோழி யார் மீதும் தன் கஸ்ரங்களை சுமத்தவில்லை யாரையும் பழி கேட்கவில்லை கேட்க நினைக்கவும் மாட்டாள். அவள் எப்போதோ விலகி விட்டாள் ஆனால் அவளால் அனைத்து துன்பங்களையும் மறந்து சகஜமாக இருக்க முடியாமல் யாருக்கும் தெரியாமல் தனக்குள்ளே தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறாள். அவள் கனவில் கூட யாருடைய அன்பையும் பிரிக்க வேண்டும் என நினைக்க மாட்டாள்.அவள் யாருக்கும் தொந்தரவில்லாமல் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் இறந்து போனாலும் போவாலே தவிர யாரையும் பிரித்து வாழ்ந்திட கனவிலும் நினைத்திட மாட்டாள். 09-Apr-2021 1:49 pm
காதல் என்றும் பொய் இல்லை ஆனால் அன்பு என்பது பொய் மறக்க முடியாத நினைவுகள் என்று ஒன்று இல்லை நாம் மறக்க மறுக்கிறோம் உங்கள் தோழி காதளுக்காகவும் அன்பிற்காகவும் உண்மையாக நேசிக்கும் இரண்டு உறவுகளை பழிகேட்பது நியாயம் இல்லை உங்கள் தோழின் காதல் உண்மை என்றால் விலக சொல்லுங்கள் இல்லை என்றால் காதலில் வெற்றிபெற்று வாழ்க்கையில் தோல்வி அடைய வேண்டிருக்கும்... ஒருவரின் அன்பை பிரித்து வாழ்வதை விட தனித்து நினைத்து வாழ்வதே நல்லது..அவளுக்கு பிடித்த அன்பை விட அவளை பிடித்த அன்புடன் இருப்பதே உண்மையான காதல்... நினைத்து வாழ்ந்திடு பிரித்து வாழ்த்திடாதே.. 02-Apr-2021 11:19 am
காதலிப்பதில் தவறில்லை கடைசியில் சேர்வது மட்டும் காதல் இல்லை அன்னை தந்தயை விட எவருக்கும் சிறந்த காதல் இல்லை இவ்வுலகில் அன்புக்காக ஏங்கும் கோடி பேர் உள்ளனர் அதில் ஒருவர் நிச்சயம் அவருக்கு கிடைப்பார் பிடித்த விசயங்களில் அதிக கவனம் செலுத்தசொல்லுங்கள் யார் தடுத்தாலும் .....மனம் மாறும் 28-Mar-2021 7:04 pm
மேலும்...
கருத்துகள்

மேலே