தேர்தல் வியாபாரம்

தேர்தல் நாள் இது
ஒருமுறை உன் ஓட்டை கொன்று ஐந்தாண்டு கண்ணீர் விடும் நீண்ட இழவு நாள்
வறுமையில் பொருளை விற்றவனை வழியில்லாமல் உரிமையை விற்க வைக்கும் நாள்
5௦௦ ரூபாய்க்கு அதிகாரத்தை இழந்து உன்னை ஊனமாக்கும் நாள்
வந்தவரை எல்லாம் வாழ வைத்தவனை எலும்புத்துண்டுக்கு காத்திருக்கும் நாயாய் ஆக்கிய நாள்
மறுபடியும் ஒருமுறை நீ எல்லாம் மறந்து சொரணையற்று நிற்கும் நாள்
மெய்யில்லா வார்த்தைகளை கேட்டு உன் விரல் மையிடும் நாள்
எவனும் சரியில்லை என்று சொல்பவனே நீ சரியாகிக்கொள் இல்லையெனில்
உன் மூச்சுகாற்றுக்கும் வரி விதிப்பான்
எல்லாரும் ஏமாற்றுக்காரர்கள் என்று சொல்பவனே நீ யார் என்று கேட்டுக்கொள்
ஆட்சியில் திட்டிவிட்டு தேர்தலில் வாக்களித்து ஏமாற்றுகிறாய் உன்னை நீயே
பல ஆண்டுகளாய்
இனி ஓட்டை விற்கும் போது நினைத்துப்பார்
நீ விற்பது ஓட்டை அல்ல உன்னை பெற்ற நாட்டை
நீ விற்பது வாக்கை அல்ல வருங்காலசந்ததியின் வாழ்க்கையை!

எழுதியவர் : அசோக் (29-Mar-21, 2:04 pm)
சேர்த்தது : அசோக்
Tanglish : therthal
பார்வை : 822

சிறந்த கவிதைகள்

மேலே