வீட்டினில் சிறைவாசம்

நேரம் நிற்பதில்லை
காலமும் நிற்பதில்லை
இவை இரண்டும்
சுழலுவதாலே நாமும்
சுழல்கின்றோமோ

சுழற்சி இருந்தால்
சுறுசுறுப்பு கிடைக்கும்

சுறுசுறுப்பு என்பது
உடம்பிலும் இருக்க
வேண்டும்
மனதிலும் இருக்க
வேண்டும்

தனிமை என்பது
கொடுமையிலும்
கொடுமை
அனுபவித்த
யாவருக்கும் அதன்
வலி புரியும்

பதினான்கு ஆண்டுகள்
வனவாசம் சென்றான்
அந்த ராமச்சந்திர மூர்த்தியே
ராமாயணம் சொன்னது

வெறும் பதினான்கு நாட்கள்
வீட்டினில் சிறைவாசம் என்றால்
எப்படி சாத்தியம் என்கிறது மனது
உள்ளம் ஏற்கிறது, அறிவு மறுக்கிறது

இதிகாசமோ, மானிட
வாழ்க்கையோ
வனவாசம், சிறைவாசம்
வேறுபாடுகள் உண்டே

சாப்பிடு தூங்கு,
தொலைககாட்சி பார்
நண்பர்களுடன் பேசு
நாட்களை கடத்து

சொல்வது எளிதுதான்
ஒரு நாள், இரண்டு நாள்
மாற்றம் இனிக்கும் தான்
இதுவே தொடர்ச்சியானால்.. ?

உடம்பிலே கோளாறு இப்பொழுது எங்களுக்கு இல்லை, எனினும்
தினமும் அரசாங்க மருத்துவர்களின்
விசாரிப்பு தொலைபேசியில் உண்டு

எங்கள் நலம் காக்க
அவர்களின் கடமையை
மனதார மெச்சுகிறோம்
கரம் கூப்பி வணங்குகிறோம்

மற்றவர்களின் நலம் கருதி
இதை நாங்கள் ஏற்றுக்
கொள்ளத்தான் வேண்டும்
காலத்தின் கட்டாயம் இது

இச்சமயத்தில் எங்களுக்கு
உறுதுணையாக இருக்கும்
மருத்துவ நண்பர்கள்
பாலாவையும்,
நேமிநாதனையும்

நினைத்துப் பார்க்கிறோம்
பெருமிதம் கொள்கிறோம்

இன்னும் மீதம் ஏழு நாட்கள் உண்டே
என்ற எண்ணமும் மேலோங்குகிறது
என்னடா வாழ்க்கை இது
என்ற சிந்தனையும் வருகிறது

வாழ்க்கையின் சித்தாந்தம்
சற்றே புரிகிறது
இதுவும் கடந்து போகும் என்று
சொல்லவே தோன்றுகிறது

ஆனந்த் சுப்ரமணியம்
தேதி - 29.03.21 நேரம் - மதியம். 1.14 மணி

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (29-Mar-21, 3:05 pm)
பார்வை : 52

மேலே