படகு
அக்கரையில் இருந்த
மனிதர்களை
மிகவும் அக்கறையோடு
இக்கரைக்கு
அழைத்து வந்தது
"படகு"...!!
படகில் பயணம்
செய்தவர்கள் கரையேறி
சென்றார்கள் ...!!
ஆனால்..
"படகு" மட்டும்
கரையோரத்தில்
தனிமையில் நின்றது ..!!
மனிதர்களில் சிலரும்
பல மனிதர்களை
தங்களின்
வாழ்க்கை வளம் பெற
"படகு" போன்று
உபயோகப்படுத்தி விட்டு
முதுமையில் அவர்களை
தனிமையில் நிற்கும்
"படகை" போல்
விட்டு விடுவார்கள் ...!!!
__கோவை சுபா