நந்தியின் எதிர் அமர்ந்த
கலித்தாழிசை பா
அந்தியில் மழைப் பொழிந்து
ஆறெல்லாம் வெள்ளம் ஓட
நந்தியின் எதிர் அமர்ந்த
நமச்சிவாயன் நடனமாட
அவ்வழகு நிகழ்வுகளால்
அகமுழுதும் மகிழ்ச்சியுற
மருந்துகளை நினைத்தவுடன்
மாயமாகும் நோய்களென
பிறந்த யாவருக்கும் சிறந்த
வாழ்வு கிடைத்ததைப் போல்
சம்பந்தர் அப்பர்
சுந்தரர் மாணிக்கர் அனைவரும்
அழகான பண் அமைத்து
ஆறறிவு கிளர்ச்சியுற்று
ஆனந்தமாய் பதிகங்கள் பாடிடவே
இவ்வுலக உயிர்கள் யாவும்
இப்பிறப்பை அகற்றி தெளிந்து உயர்ந்தனவே
-------- நன்னாடன்