யாரோ நீ
உன் பெயர் கூட எனக்கு ஞாபகம் இல்லை
நீ எங்கிருக்கிறாய் என்பதும் தெரியவில்லை
அன்று என்னை பிடிக்கும் என்றாய்
காரணம் எனக்கே பிடிபடவில்லை
தெரிந்தவர்களுக்கு கூட என்னை பிடிப்பதில்லை
தெரியாததால்தான் பிடித்ததா
தெரிந்திருந்தால் என்ன என் நிலைமையோ
பிடிக்கவில்லை என்றால்கூட முகத்திற்கு நேரே யாரும் சொன்னதில்லை
பிடித்ததை சொன்னதால்தான் பிடித்ததோ உன்னை
கவிதையில் சொல்லத் தெரிந்தவன் கண்களைப்பார்த்து சொல்ல நினைக்கவில்லை
மற்றவர் கண்களால் உன்னை பார்த்தவன் என் கண்களும் உன் அழகை ரசிக்கவில்லை
புற அழகை அழகென்று நினைத்து உலக அழகி உன்னைத் தவறி விட்டேனோ
உன்னை ரசிக்க நான் நினைக்கும்போது என்னை விட்டு எங்கோ நீ!!
என்னமமோ பல பெண்கள் சுற்றும் மன்மதன் போல மெத்தனம் கொண்டு
என்னை ரசித்த உன்னையும் ரசிக்க மறந்தேன்
உன்னைக் காணும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் உன்னிடம் கேட்க ஒரே கேள்வி
என்னை மன்னிப்பாயா?