இயந்திரமாக நாம்
குரங்கிலிருந்து மனிதனாக...
மனிதனிலிருந்து இயந்திரமாக...பரிணாம வளர்ச்சியில் நாம்.
தாய்நாட்டுப்பற்றை எரிபொருளாக எரித்துக்கொண்டு
வெளிநாட்டுக்கு வேலை செய்யும் இயந்திரம் நாம்;
ரூபாய் நோட்டுகளுக்கு ஓட்டுகளை விற்று வாக்கு
இயந்திரத்தில் சின்னங்களை அழுத்தப் பயன்படுத்தப்படும் இயந்திரம் நாம்;
கல்வி என்னும் பெயரில் தகவல்களை மட்டும் மூளையில்
பதிவேற்றி தேவைக்கு பயன்படுத்தப்படும் இயந்திரம் நாம்;
உணர்வுகள் அழித்து உயிருடன் இயங்கும் ஒன்றுக்கும் உதவாத இயந்திரம் நாம்;
மருந்துகளை விற்க,நோய்களை வாங்கி பரப்பப் பயன்படுத்தப்படும் இயந்திரம் நாம்;
சுயமாக எதையும் திறமாக செய்யாமல் அடுத்தவன் இயக்கும் இயந்திரம் நாம்;
எவன் செத்தாலும் தன் வேலையில் கருத்தாக கடமையாக உணர்வற்று உழைக்கும் இயந்திரம் நாம்;
மனிதன் இயந்திரத்தை உருவாக்கினான்;இயந்திரம் இன்று மனிதனை இயக்குகிறது!
இயந்திரத்தால் இயக்கப்படும் இயந்திரம் நாம்!
சக மனிதன் துன்பத்தை இன்பமென நினைக்கும் இயந்திரம் நாம்!
சாலை விபத்தில் இருப்பவனிடமிருந்தும் ஆதாயம் எதிர்பார்க்கும் பணம் எண்ண ஆசைப்படும் இயந்திரம் நாம்!
நம்மை மறந்த இயந்திரம் நாம்!நம்மை இழந்த இயந்திரம் நாம்..............
ஆம் இது என் இயந்திர நாடு:!!!!!