ஜாதி

உழவன் விளைவித்து உண்கிறாய்
நெசவாளன் நெய்து உடுத்துகிறாய்
கொத்தன் கட்டிய வீட்டில் வாழ்கிறாய்
கூலித்தொழிலாளி உழைப்பில் பிழைக்கிறாய்
எவனோ என்று நினைப்பவர்களிடமெல்லாம்
எவ்வளவோ தேவைகளை தீர்க்கிறாய்
ஆனாலும் நீ உயர்ந்த இனம் என்கிறாய்
மண்ணிலும் ஜாதி பெண்ணிலும் ஜாதி
நாயிலும் ஜாதி நரியிலும் ஜாதி
குருவியில் ஜாதி குரங்கிலும் ஜாதி என்றாய்
குரங்கிலிருந்து வந்த நீ
மலைக்குரங்கு ஜாதியா?
மண்திண்ணும் ஜாதியா?
தொழில் அடிப்படையில் ஜாதி என்கிறாய்
தொழிலை விட்டும் தொல்லைபிடித்த ஜாதியை விடவில்லை
அடையாளம் அடையாளம் என்றாய்
அடையாளம் தொலைத்து அனாதையானாய்
ஒரே இனம் என்றாய்
உன் இனத்து ஏழைக்கூட்டத்தை ஒரு அடி தள்ளிநில் என்றாய்
எந்த ஜாதி உயர்ந்தது உனக்கு-பணத்தைத்தவிர
வேறு ஜாதிப்பெண் வேண்டாம் என்பாய்
வேற்றுஜாதிக்காரன் வயலில் விளைந்த அரிசியை உண்பாய்
வெக்கம்கெட்டஜாதி உனது
காதல் பிரச்சனையில் கொலை செய்வாய்
பெயர் கௌரவக்கொலையாம்
கன்றாவிக்கொலை இது
ஜாதி என்னும் மயிறுக்கு உயிரை எடுப்பதா?
என்ன கொடுமையடா

வேண்டாம் இந்த ஜாதியும்
பிற மனிதரைத் தாழ்த்தும் நீதியும்

எழுதியவர் : அசோக் (18-Sep-21, 4:46 pm)
சேர்த்தது : அசோக்
Tanglish : jathi
பார்வை : 467

மேலே