இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

இணைக்குறள் ஆசிரியப்பா
----------------------------------------------------

தேனினும் இனியதாம் தாயான செந்தமிழ்
வானினும் உயர்ந்ததாம் பைந்தமிழ்
அமிழ்தினும் சிறந்ததாம் குளிர்தமிழ்
இறையிலும் மூத்ததாம் அருந்தமிழ்
இளமையில் இளையதாம் பனித்தமிழ்
அறிவியல் நிறைந்ததாம் அழகுதமிழ்
இலக்கண செறிவான எந்தமிழ்
உலகில் முதல்மொழி ஆதிதமிழ்
யாவைக்கும் பெயர்வைத்த தாய்தமிழ்
அருள்மறை ஆக்குவித்த நிறைதமிழ்
உயிர்களை ஒன்றாய் போற்றியே
உலகத்தை வீடாய் எண்ணியே
அருஞ்சொல் கொண்டே பாடியே
இருக்கும் ஆருயிர் தமிழின்
இனிமையாய் சித்திரை நாளின் வாழ்த்துகளே.
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (14-Apr-21, 8:34 am)
பார்வை : 36

மேலே