தீரங்கொள்வோம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

போதைக் காரணிகள் வீட்டுக்கும் நாட்டுக்கும் விளைவிக்கும் பெரியதாய் தீங்கை
பாதையை மாற்றி அதனையே உட்கொள்ளும் நபரின் குடும்பத்தை சிதறடிக்கும்
பேதைப்போல் பெண்டீர் நோகவே யாராலும் உதவயியலா துன்பத்தை தந்திடும்
வாதையால் குடும்பத்து நபர்கள் கலக்கமுற்று வீழ்வர் ஆற்றொன்னா துயரிலே

படித்தோன் படிக்காதோன் சிறுவர் மகளிர் மாணவன் மாணவிகள் என்போரும்
நடிப்போன் உழைப்போன் பணத்தோன் கொடுப்போன் திருடன் விவசாயன் என்போரும்
அடிமை அரசியலன் வியாபாரி தரகன் கல்வியாளன் கூத்தாடி பொய்யன்
முடிவெட்டி மரமேறி செம்படன் குயவன் வண்ணார் யாவரும் குடியிலே

அரசின் வருவாய் அதிகமென குடிபொருள் விற்பனையில் கோடியாய் கொட்ட
அரங்கொண்டு எதிர்ப்பின் நிறுத்தவே இயலாத அரசின் தொழிலாய் மதுவிற்பனை
அரவத்தின் நஞ்சுண்டு குடும்பம் சீரழிந்தாலும் ஊரையே குடிகெடுப்பின் கவலையில்லை
அரசியலோர் குறைகளை களைவதாய் கூவுவார் பதவிக்கு வந்தபின் கூவல்காற்றே.

கற்றோர் சிறந்ததாய் அறிவைக் கொண்டோர் முடவர் ஆன்மிகவாதி என்போர்
பெற்றார் நட்போர் உறவோர் துணையோர் என்கிற பல்வேறு நபர்களும்
உற்றார் உடன் பிறந்தோர் நம்மால் பிறந்தோர் எனப்படும் யாவரும்
பற்றியே பரவசமாகும் போதை பொருட்களை ஒழிக்கவே தீரங்கொள்வோம் மனதிலே .
------- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Apr-21, 11:11 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 31

மேலே