மாலும் மருகனும்
கண்ணனுக்கு சிரசில் மயிர்ப்பீலி
வண்ணன் இவன் மருகன்
முருகனுக்கு மயில்தான் வாகனம்
வேலவனுக்கு வேல் ஆயுதம்
மாடு மேய்க்கும் கண்ணனுக்கும்
வேல் ஆயுதம் உண்டு
மேய்க்கையில் ,' வென்று பகைக்கெடுக்க'
என்று சூடிக் கொடுத்த சுடர்க்கொடி
திருப்பாவையில் கூறிய வண்ணம்;
குன்றமெல்லாம் குடி இருப்பான்
குமரன் என்றால் கண்ணனும்
விரும்புவதும் குன்றமல்லவா
'குறையொன்றுமில்லா கோவிந்தன்
குடி இருப்பது ஏழுமலைமீதல்லவா
இப்படி மாமனும் மருமானும்
கொஞ்சி குலாவ வாருங்கள்
அவர்கள் வாழ் குன்றம் தேடி
நடந்தே போவோம் மனமார
கண்டு அங்கமெல்லாம் பூமியில்
பதிய சேவித்து மனதில் மேலும்
முருகனும் என்றும் இருந்திடவே வேண்டி