அருமை உணர்ந்தால்

ஒழுகிசை அகவல் ஓசை உடைய
நிலைமண்டில ஆசிரியப்பா

கரும்பென ஒப்ப ஒருவரை எண்ணின்
வேம்பென அவரின் செயல்கள் வெளிப்படின்
பயப்பட வேண்டாம் அவரோ அரசியல்
சார்ந்த அருந்தொண் டினையே செய்யவே
அகிலத் திற்குள் வந்ததூ துவரே.

அரசுகள் விதிக்கும் அனைத்து வரியுமே
குடிகள் தாங்கா பாரமாய் மாறினால்
ஒழுக்கம் குலைந்தே கலகம் பிறக்குமே
ஆணவம் கொண்டதை அடக்கவே முயன்றால்
பிளந்த கல்லென மாறிடும் நிலைமையே.

அரசுத் துறையிலே இடத்தினை மாற்றவே
கணக்கிலா வகையிலே மிகுநிதி கேட்பின்
நல்நிலை ஊழியர் தீயவெண் ணம்பெற
வழிவகை தோன்றும் பணியுங் கெட்டே
அவலம் தோன்றியே அல்லல் முளைக்குமே.

மக்களின் பெருக்கம் ஒப்பவே தேவையைப்
பூர்த்தி செய்யும் எவையையும் ஆக்கவே
அரசுகள் முயலும் போதும் மட்டுமே
விலையில் வீழ்ச்சியும் கிடைக்கும் அன்பரே
இல்லையேல் வரவின் மிகுதியாய் செலவே.

பொய்யும் களவும் ஏமாற் றுங்குழும்
பெருகியே நிரம்பிய வல்லுனர் கூட்டமாய்
உலகெலாம் அமையும் அவைகளை உதறிய
வாழ்வென் பதோஅரி தாகும் அன்பரே
நல்லதாய் எண்ணம் கொண்டோர் இறையே.
------- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (16-Apr-21, 6:20 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : arumai unarnthaal
பார்வை : 42

மேலே