பித்தன் ஆனேன் உன்னால்

சாயம் போன இதயத்தில் சந்தனம் பூச வந்தவள்!

சாயங்கால வேளையில் சந்திரனை எனக்குள் அழைத்து வந்தவள்!

வெறுமையாய் போன உள்ளத்தில் வர்ணம் பூச வந்தவள்!

வானம் பூமி இரண்டையும் ஒன்றாய் எனக்குள் காட்டியவள்!

இருளாகி போன எனக்குள் அகல் விளக்கு ஏற்றி வைத்தவள்!

புத்தனை போல புத்தி எனக்குள் புகட்டியவள்!

பித்தனை போல உன்னை மட்டும் சுற்றி வர வைத்தவள்!

எழுதியவர் : சுதாவி (19-Apr-21, 8:11 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : pithan aanen unnaal
பார்வை : 216

மேலே