ஆடவரை அடிப்படித்தாள் அர்ச்சனா

ஜெபா கம்பெனியில் இருந்து
வேளையில் இருந்து வெளியே துரத்தப்பட்டான்
மீட்டிங் முடிந்ததுமே பை எடுத்துக் கொண்டு
தலை குனிந்து வெளியே நடந்தான்
மீட்டிங் ரூம் கண்ணாடி வழியாக பார்த்தவர்கள் ஆள் ஆளுக்கு கதை கட்டி விட்டார்கள்
மாதம் ஒரு லட்சம் சம்பளம் உடனே எங்கே கிடைக்கும்
ஏன் வேலையை விட்டு வந்தாய் எனக் கேட்டால் அவன் என சொல்வான்
இவள் நினைத்தை சாதித்து விட்டாள் கள்ளி
அவள் உண்மை சொரூபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும் ஒரு நாள்
அந்த பெண் மேலதிகாரியிடம் ஒடி உறவாடி அந்த ஏழு பேர் அணியில்
தற்போது ஆறு பேர்
அதில் அவன் இரண்டு பேரை வேலை சரியாக செய்யவில்லை என தூங்கிவிட்டான்.
இரண்டு பெரும் இவளுக்கு நெருப்பிய தோழர்கள்
அதனால் தான் பழி வாங்கி இருப்பாளோ ?
மற்ற ரெண்டு பெரும் சம்பளம் சரி இல்லை என்று மாறி விட்டார்கள்
இப்பொழுது அணியில் இவளும் ன்னொருவனும் தான்
மூன்று மாதத்தில் எல்லாம் தலை கீழ்
இன்னொருவன் ஐந்து வருடம் இங்கேயே இருக்கிறான்
ஆனால் வேலை கற்றுக் கொண்டு அவனை முண்டிக் கொண்டாள் இவள்
அவனும் இவளிடம் வழியவே நல்லது என நினைத்துக் கொண்டானோ என்னவோ
சாப்பாடு டி காபி என்ன எல்லா நேரத்திலும்
பாத்திமா (மேல் அதிகாரி ) அவளிடமே ஒட்டிக் கொண்டாள்
இவள் சாதாரண அசிஸ்டண்டாக இருந்து வந்தவள்
அவள் ஒரு டைரக்டர் பாத்திமாவை கையில் போட்டுக் போட்டுக் கொண்டாள்
அதனால் இவளுக்கு தனியாக நான்கு பெரிய வேலைகளும்
நான்கு நாட்டு சுற்றுப்பயணமும் முன்னுரிமை
எல்லோரும் இவளைக் கண்டு ஓடினார்கள்
ஒருவன் தண்ணீர் பிடிக்க சென்றான்
இவளைக் கண்டு பாத்ரூமுக்குள் பாட்டிலை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான்
எங்கே பார்த்தாள்
கையைப் பிடித்து இழுத்தேன் என்பாள் என்பான்
எல்லோரும் பயப்படவே செய்தார்கள்
ஒரே ஆட்டம்
சிரிப்பு சத்தம்
யாரையும் மதிக்காத குணம்.
அவளெதிரே ஒரு கிழட்டு மேனேஜர் இவளை பார்த்து ஜொள்ளு விட்டான்
எப்போதும் எட்டிப் பார்த்துக் கொண்டே இருப்பான்
வெள்ளை முடி நரைத்தாலும்
ஆசை மறைக்கவே இல்லையே
கிழவன் முறைக்கிறான் என சொல்லி அவள் இருக்கையை
எதிரே மாற்றிக்கொண்டாள்
அவன் விடவில்லை
தினம் பத்து மெயில் அனுப்பினான்
எடோ அனுப்பி தொலைத்தான்
சாயங்காலம் நேரம் தான் அனுப்புவான் போலாம்
அப்பொழுது தான் ஒரு கவிஞ்சன் உருவாகுவானோ ? என்னமோ ?
இவளும் பொறுத்துப் பார்த்தால்
கிழவன் அடங்கியதாக இல்லை
கிழவன் தண்ணீர் பிடிக்கும்போது வழி மறித்தான்
உன் பெயர் என்ன என்பான்
கிண்டல் செய்வான்
இவளும் பல் இளித்தால் என்றே சொல்ல வேண்டும்
இவன் தான் அமெரிக்கா செல்ல உதவி புரிவானா? என தெரிந்து அறிந்து
இவனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என தெளிவு படித்த பிறகு
ஒரு நாள் சாப்பாடு வேளையில்
பாத்திமாவிடம் மெல்ல வாதி வைத்தாள்
அந்த சித்தப்பா(ஜெபா) இடக்கு செய்தார் , அனுப்பி விட்டோம்
இப்போ இந்த தாத்தா என்று கூறினாள்
நேரம் வர காத்து இருந்தார்கள்
அந்த கிழவனுக்கு அவன் அணியிலேயே ஆபத்து காத்து இருந்தது
வேறு ஏதோ பெண்ணை சீண்டி இருக்கிறான் போல
அவள் வேலையை விட்டுச் செல்லும்போது
இவன் லீலைகள் எல்லாவற்றையும்
மேனேஜரிடம் சொல்லிச் சென்று விட்டாள் போல .
மனித வள மேனேஜர் இதை விசாரிக்க
கிழவனை வறுத்தெடுத்து விட்டாள் அர்ச்சனா
கூனிக் குருகிப் போனான் கிழவன்
வயது வித்யாசம் பார்க்காமல் அவனை திட்டி தீர்த்தாள்
அவள் திமிர் இன்னும் அதிகமானது
மீட்டிங் நாடாகும் நேரத்தில்
உள்ளே நுழைவாள்
எல்லோரையும் பற்றி வத்தி வைத்தாள்
தான் மட்டும் தான் உலகிலேயே நல்லவள் என கூறிக் கொள்வாள் போல
எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வாள்
மற்றவர்களை விட முந்தி செய்வதை தான் தான் செய்தேன் என பாத்திமாவிடம்
உடனே போய் கூறி வருவாள்
வேறு ஒரு அணியில் எவனோ அமெரிக்கா செல்ல தேர்வு ஆகி இருக்கிறான் என்றவுடன்
அவனைப் பற்றியே விசாரித்து இருப்பாள் எல்லோரிடமும்
எங்கெளெலாம் குறுக்கு வழி இருக்கிறதோ அங்கெல்லாம் நுழைய முயற்சிப்பாள்
இன்னொரு துறையில் நுழைய போய் வேலை வேலை கேட்டு இருக்கிறாள் யாருக்கும் தெரியாமல்
அங்கு அவளுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை போல
இன்னொரு சிலுக்கு கடையை கேட்டு அறிந்தாள்

எழுதியவர் : கவிராஜா (13-May-21, 7:05 pm)
சேர்த்தது : சுரேஷ்ராஜா ஜெ
பார்வை : 147

மேலே