சிலம்பாட்டம்
சிலம்பாட்டம்
சிலம்பாட்டம் என்பதுவோர் தற்காப்புக் கலைதானே
..சீர்மைமிகு தமிழர்தம் செம்மையான விளையாட்டே!
நீளமான கம்புகொண்டு சுற்றியாடும் ஆட்டமிதை
..நெஞ்சினிலே துணிவுடையோர் சுற்றிநின்றே ஆடிடுவர்!
கண்பார்வை கவனமுமே கச்சிதமாய் வேண்டுமையா;
..கருத்தான வேகத்தில் கவனமுடன் ஆடவேண்டும்!
முன்வைத்த காலினையே முனைந்துநின்றே ஆடினாலே
..மூர்க்கருமே பின்னோடிப் பிழைத்திடுவர் சொன்னேனே!
- வ.க.கன்னியப்பன்