மாலைப் பொழுது பௌர்ணமி ஆனது

தென்றல் வீசும் சாளரத்தில் சிகை கலைய
நீலவானத்தை ரசித்தேன்
தேன்மலர்கள் நூறு தென்றலில் ஆடிடும் அழகை
தோட்டத்தில் ரசித்தேன்
பிறை நிலவு ஒன்று மெல்ல முகிழ்த்து வருவதை
மாலை வானில் பார்த்தேன்
முழு நிலவு ஒன்று என்முன்னே வந்து
புன்னகையில் நிற்கக் கண்டேன்
மாலைப் பொழுது பூமியில் பௌர்ணமி ஆனது !

எழுதியவர் : கவின் சாரலன் (13-May-21, 7:10 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 57

மேலே