காதல் விழி கன்னி

கடைக்கண் பார்வைதனை கன்னியரும் காட்டிவிட்டால் காளையருக்கு மாமலையும்
எளிதாம்யென்பதே வழக்கமொழி.

அவள்உருளும் விழிகள் ஓராயிரம் மொழிகள் பேசும்

ஒவ்வொன்றும் ஆயிரம் கவிகள் வீசும்
வீசிய கவிகள் காதல்கதைபல பேசும்

யென்விழி அவள்விழி நோக்க அன்னியர் நுழைகையில் மிரளும் அவள்விழியின் சமிக்ஞை க்கு தனிஅகராதி தந்திடலாம்

அசையும்கருவிழியில் ஆயிரம்பொருள் தந்து காதல்மயக்கம் ஏற்றிடுவாள் யெனை
இன்பகிளுகிளுப்பில் ஆழ்த்திடுவாள்

பண்கொண்டு பாடிடும் இமைஅசைவில்
இங்கிதமாய் யென்இதயத்தை இரவல் எடுத்திடுவாள்
எடுத்தயென் இதயத்தை எப்பொழுது திருப்பிடுவாள் !

கருவிழிப்பார்வைக்கு கருப்பொருள் அறியேன்யான்
பொருளறிந்தவர் புகலிடம் அறியேன்

காதல்நய கட்டியம்கூறிவரும் கண்ணிமை அசைவு கணப்பொழுதில் கூட்டிடும் காணாத சொற்சித்திரம் பல

பொருளறிந்தவர் தெளிந்தவர்இருப்பின்
கற்பிப்பீர் கன்னியின் கண்ணசைவை

கண்அசைவில் அவள்கண்இசைவில்
கன்னி யின் கண்ணின் இசையில்
இயங்குகிறது யென் இதயம்.

எழுதியவர் : பாளை பாண்டி (27-May-21, 4:43 pm)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 219

மேலே