துணை

வானும் மண்ணும்
விதையின் வாழ்வுக்கு
இயற்கையின் புறத்துணை

இறைபக்தியும் அருள்மொழியும்
எதையும் தாங்கும்
இதயத்தின் அகத்துணை

பிரிவும் இழப்பும்
நேர்ந்த நெஞ்சுக்கு
நல்நினைவுகளே துணை

அவ்விதயத்தின்
கனவுகளும் ஆசைகளும்
நிறைவேற துணை
பணிவான துணிவோ?!

-தினேஷ் காளிமுத்து

எழுதியவர் : தினேஷ் காளிமுத்து (6-Jun-21, 11:09 am)
Tanglish : thunai
பார்வை : 45

மேலே