கனவு பெண்ணே
கனவில் தினமும் வருகிறாய்!
கவிதை பல படிக்கிறாய்!
இரவு முழுவதும் என்னை தாலாட்டுகிறாய்!
வழியில் விண்மீன் கோலம் போடுகிறாய்!
வழியெங்கும் வானவில்லை நட்டுவைக்கிறாய்!
முகவரி கேட்டால் மௌனமாகிறாய்!
முத்தம் கேட்டால் மலரை தருகிறாய்!
விடியும் வரை காத்திருக்க மறுக்கிறாய்!
சூரியன் வரும் முன்னே சொல்லாமல் செல்கிறாய்!
போதுமடி உன் விளையாட்டு!
விழி முடி காத்திருக்கிறேன்!
விடியலில் என் வீட்டு வாசலில் கோலம் போட வந்து விடு!