“பைரவி”

என் மனது நான் செய்யும் வேலையில் சரியாய் என்னை செயல்பட விடவில்லை.
இதயத்தில் நெறிஞ்சு முல் குத்துவதுபோல் வலி இருக்கவே செய்தது.கண்களை குளமாக்கி இமைகளை மூடி திறந்தும். அந்த நினைவுகள் என்னைவிட்டு விலகுவதாய் இல்லை.
வீட்டின்முன் ஒவ்வெருவராய் வரத்தொடங்கினர்.அதில் ஒருவர் “பக்கத்துவீட்டில் இருக்கும் டாக்டர் இருக்காரா”? என்று கேட்டார்.முடிந்த அளவுக்கு ஒவ்வொருவரும் அவரவர் நிலையில் எதையாவது செய்து எப்படியாவது ஒரு உயிரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள்,
சின்ன குழந்த… மூணு மாசம்கூட ஆகல என்றார் ஒருவர்.
”நான்கூட நேத்து பாத்தன். நல்லாதான் விளையாடிகிட்டிருந்தது. நல்லா அழகா கொழுகொழுன்னு செகப்பா” …. கண்ணத்தில் கைவைத்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தனர்.
நான் காலையில் செய்தியை கேள்விப்பட்டு வெளியில் நின்று அதன் நிலையை பார்த்தபோது…சின்னதாய் ஒரு முனகல் சத்தம்.
யாரோ முதுகில் அடித்திருக்கிறார்கள்
அந்த முனகல் என் உயிரின் ஓட்டத்தை நிருத்திவிடுவதுபோல் இருந்தது.
என்னை அடித்தவனை நீ போய் கேள் .ஏன் அடித்தாய்? என்று சொல்வதுபோல் இருந்தது.
நான் அந்த குழந்தைக்கு பெரியதாய் எதையும் செய்யவில்லை. என் மனைவிதான் காலையில் பால்காரரிடம் பால் வாங்கியதும் அந்த சின்னஞ்சிரு குழந்தைக்கு ஒரு கொட்டங்குச்சியில் பால் ஊற்றிவிட்டு வீட்டிற்குள் வருவாள்.
அந்த நன்றியில் ,அந்த குழந்தை உரிமையோடு என்னைபார்த்து ‘என்னை காப்பாற்ற எதையாவது செய் “ என்று கெஞ்சியிருக்கிறது.
அதன் அருகில் சென்று ஆருதலுக்காககூட அந்த பிஞ்சுமேனியில் கைவைத்து வருடிவிடாததும், நான் வேலைக்கு செல்லும்போதும்,வேலையிலிருந்து வரும்போதும் குழவி குழவி விளையாடும் விளையாட்டினை ரசிக்காமல் அதனை துரத்திவிட்டதும் எவ்வளவு பெரிய தவறு என்பதினை
அந்த நன்றியுடைய பிஞ்சு ஜீவன் அதன் மரணத்தின்மூலம் உணர்த்திவிட்டு சென்றிருக்கிறது
சோதனை காலங்களில் ,நேசித்தவர்கள் ஆருதலுக்காககூட அருகில் வந்து நிற்காததும்.ஏன் என்று கேட்காததும் மிகப்பெரிய குற்றம்தான். ஆகையால்
என்னை மண்ணித்துவிடு “பைரவி”
“பைரவி “ அந்த சின்ன பெண் நாய்குட்டிக்கு என் மனைவி வைத்த செல்லப் பெயர்.

எழுதியவர் : இரா.ரமேஷ் (9-Jun-21, 10:49 am)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 104

மேலே