பரிசு
அப்பா ஒரு போராளி .அவரை சுற்றி நடப்பவையெல்லாம் சரியாக இருக்கவேண்டும் என ஆசைப்படுவார். இரண்டு மூன்று நாட்களாகவே அப்பாவின் முகம் சோகமாக இருந்தது. மேசையின் மீது அவர் எடுத்து வைத்த அந்த புத்தகத்தை பார்த்தவுடன் புரிந்துகொண்டேன். இன்று அப்பா யாரோ ஒருவருக்கு இந்த புத்தகத்தை கொடுத்து நாகரீகமாக அவர்கள் செய்யும் செயலை தவறு எனறு உணர்த்தபோகிறார். நியாயத்திற்காக போராடி அது முடியாமல் போகவே, இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
`நீங்க ஒருத்தர் எடுக்கிற முயற்சியால இந்த சமூகத்த திருத்தமுடியுமாப்பா ?` என்று பலதடவ கேள்வியா கேட்டன். ஒவ்வொருமுறையும் நம்பிக்கையோடு` ஒன்னு ரெண்டாகும்,ரெண்டு பத்தாகும்.ஒரு நாள் இந்த ஒட்டுமொத்த சமூகமும் சுத்தமாகும்`.என்று பதில் சொன்னார்.
சரி,அந்த புத்தகத்துல அப்படி என்னதான் இருக்கு ?
முகப்பு அட்டையில இருக்கிற வாசகங்கள் நெருஞ்சி முள் மாதிரி சுருக்குன்னு குத்தும்.
தப்பானவங்களுக்கு சுடவும், நல்லவங்களுக்கு சுகமாகவும் இருக்குற வார்த்தைகள் இதுதாங்க…..
`மனித வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியவை புண்ணியங்களும்,ஆசிர்வாதங்களும் ! .சம்பாதிக்ககூடாதவை சாபமும்,பாவமும்.!``
புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு `இராமு கொஞ்சம் நீயும் கூடவாடா`என கூப்பிட ,மறுப்பில்லாமல் நானும் அவரோடு நடந்தேன்.
நடந்துசென்ற வழிநெடுகிலும் அவர் மனதில் உள்ள பாரத்தை வார்தைகளாக்கி கொட்டினார்.
` நான் மேஸ்திரிக்கு பலமுறை சொல்லிட்டன்.நீ சின்னவனா இருக்க ,வயசு நிறைய இருக்கு.லாபம் தேவதான் ஆனா ,செய்யுற தொழில்ல சுத்தம் வேணும்.தொழில் தர்மம் வேணும். அது இல்லாம செய்யாத .அது தப்புன்னு சொன்னன்.ஆனா கேட்கல.`
புரிந்துவிட்டது எனக்கு.
ரயில்வேஸ்டேஷனில் நிழற்குடையின் கீழ் பதட்டமுடன் அப்பா.
நல்லதோற்றத்தில் கையில் மடித்த காகிதங்களை மேஸ்திரி நீட்ட,.
அப்பா அதை சரி பார்த்துவிட்டு ` சார் ,உங்கள மாதிரி திறமையானவங்கள வச்சு இந்த வீட்ட கட்டமுடியலயேன்னு வருத்தமாதான் இருக்கு. இருந்தும் என்ன சார் பன்றது ,சூழ்நிலை சரியில்ல அதான் இந்த முடிவு.` என்று அவரைப்பார்த்து இருகை கூப்பி வணங்கியபோது எனக்கு அழுகை வந்தது.
சமாளித்துக்கொண்டு கையிலுள்ள புத்தக அட்டையை பார்த்தேன் . அதில் ` முடவனை மூர்க்கன் அடித்தால் ,,மூர்க்கனை முனி அடிக்கும்.பலரது பாவத்தையும் சாபத்தையும் பெறுபவர்கள் என்று தொடர்ந்தது ` ` படித்தவுடன் மனது ஆறுதலடைந்ததும்
`சார், எனக்கு அதிகம் பிடிச்ச நல்ல நண்பர்களு .என் நினைவா ஏதாவது கொடுப்பது வழக்கம் ` என்று என்னிடமிருந்த புத்தகத்தை வாங்கி `இந்தாங்க சார் ` என்று கொடுத்துவிட்டு ,என் கைபிடித்து நடந்தார்.
`அவன் இனிமேலாவது வாழ்க்கையில் புண்ணியங்களை சம்பாதிக்க என்னுடைய ஆசிர்வாதங்கள் ! என என் அப்பாவின் கைபிடித்து நான் நடந்தேன்.