பருவத்தே பயிர் செய்

இன்று முதல் ஆனந்த் ஒரு புதிய நிறுவனத்தில்
உதவி பொறியாளராக
வேலைக்கு செல்கிறான்.
இந்த வேலை அவன்
தந்தையின் நண்பர் ஒருவரின் உதவியால் அந்த
நிறுவன நிர்வாக இயக்குனரின் நேரடி
சிபாரிசின் மூலம் கிடைத்தது.

ஆனந்திற்கும் சரி
அவன் தந்தைக்கும் சரி சிபாரிசு என்பது அறவே
பிடிக்காது.
ஆகையால் தான் கல்வியை முடித்து
வேலையில்லாமல் கடந்த இரு வருடங்களாக
வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான்.
வேறு வழியில்லாமல் ஆனந்தின் தந்தை
கனகராஜ் தன் நண்பர் ஜீவாவின் உதவியால்
அவரது நண்பரின் மூலம் இந்த வேலையை
ஆனந்திற்கு வாங்கிகொடுத்தார்.

அவன் அந்த வேலையில் சேர்ந்த அன்றே இவனுடன்
எல்லோரும் சிறிது அச்சத்துடனே பழகினார்கள்
ஆனந்த் MDயின் கையாள் என்றும் நம்மை பற்றி
உளவு கூறுவான் என்றும் சிலர் இவன் காது
படவே பேசுவதை கூற கேட்டிருக்கிறான் .

ஆயினும் அவன் எதை பற்றியும்
கவலைபடாமல் தன் கடமையை
செய்து விரைவாக அங்குள்ள
பணிகளை கற்று கொண்டான்.

ஆனந்த் பணியாற்றுவதை கண்டு அவன் மேலாளலர் பல முறை
பாராட்டியதோடு
இது தான் வயது
கூட்டு புழுவா இங்கேயே
ஊட்கார்ந்திடாம மாறிகிட்டே இருங்க வெளி நாடுகளுக்கு முயற்சி செய்யுங்க உங்க திறமைக்கு
சீக்கிரம் உயர்ந்திடலாம்
மிஸ்பண்ணிடாதீங்க ஆனந்த் என்று அறிவுரையும் கூறுவார்

ஆனால் அந்த அறிவுரைகளை
கேட்கும் போதெல்லாம் ஆனந்தின்
மனதில் மற்றவர்கள் கூறிய வார்த்தைகள்தான் நினைவுவரும்" "இவன் MDயோட
கையாள் இவன்கிட்டா பார்த்து
கவனமா நடந்துக்கணும்" .
ஒரு வேளை நம்ம நல்லா வேலை
செய்து எங்க இவர் போஸ்ட்டுக்கு
வந்துடுவோமோனு பயந்து இப்படி
நம்மை கிளப்ப திட்டம் வகுக்கிறாரோ என்று .

ஆனால்,அதன் பின் வந்த அனைத்து மேலதிகாரிகளும் இதையே தான்
ஆனந்திற்கு அறிவுரை
கூறினார்கள்.

காலங்கள் கடந்தது
ஆனந்த் திருமணமாகி குடும்பம்
குட்டி என்றும்
ஆகிவிட்டது.
தந்தையின் நிழலிலே
வாழ்ந்து வந்த ஆனந்த சில குடும்ப
சிக்கல்களால்
தனி குடித்தனம் வர நேர்ந்தது
.அப்போது தான் வாழ்க்கையும்
வருமானத்தின் அவசியமும்
அவனுக்கு புரிந்து .

இத்தனை ஆண்டுகளாக
அந்த நிறுவனத்தில்
இரவு ,பகலாக அயராது உழைத்தும்
அவன் ஊதியம் பெரிதாய்
ஒன்றுமில்லை.
வீட்டு செலவிற்கே
பட்ஜெட் போடும் நிலை அப்படி
இருந்தும் மாத கடைசியில்
யாரிடமாவது தலையை சொரிந்து
நின்று கைமாற்றாக கடன் கேட்டால்
தான் அவனின் அந்த மாதத்தை
இழுத்து பிடித்து தள்ளும்
நிலைக்கு ஆளானான்.இப்படியாக
வாழ்க்கை சென்று
கொண்டிருக்கும் நிலையில்

ஆனந்த் ஒரு நாள்
மார்க்கெட் சென்று திரும்பி நடந்து
வந்த கொண்டிருக்கும் போது
ஒரு கார் அவனை இடிப்பது போல் வருவதை கண்டு விலகி நின்றான்.
அவனருகே வந்து நின்ற காரின் கண்ணாடி
திறக்கபட்டு அதிலிருந்து டேய் மச்சி
ஆனந்த் என்று ஒரு குரல் அழைப்பதை
கண்டு அருகில் சென்று யாரென்று
பார்த்தான்.அது வேறு
யாருமில்லை அவனுடன் இதற்கு
முன் பணிபுரிந்த மகேஷ் தான் அது

ஆனந்த் அவனை வியந்து பார்த்து
ஹே மகேஷ் how r u da மச்சி பாத்து
ரொம்ப நாள் ஆகுது ஒரு கால் கூட
பண்ணலை அதுக்கப்புறம் .இப்போ
எங்க ஒர்க் பண்ற என்று கேட்க
அதற்கு மகேஷ்' ஆமாம் நீ
நாள் தவறாம
அப்படியே கால் பண்ணிடுற போடா.
அங்க இருந்து வந்து நிறைய
கம்பெனி மாறிட்டேன் மச்சி இப்போ
ஒரு கம்பெனியில AGM ஆ இருக்கேன்
மாதம் 1,5 lakhs salary .
அப்புறம் நீ
இன்னும் அந்த கம்பெனியிலே தான் இருக்கியா இப்போ என்ன தான் salary வாங்குற என்ன போஸ்ட்டிங் என்று கேட்க.
உடனே ஆனந்த்
எங்க மச்சான் இப்போ தான் 20k
தொட்டிருக்கேன் இன்னும் அதே
போஸ்டிங்ல தான் இருக்கேன்
குடும்பத்தை ஓட்றதே ரொம்ப
கஷ்டமா இருக்கு .

மகேஷ்:
உனக்கு அப்பவே
எல்லோரும் சொன்னோம் உனக்கு
திறமை இருக்கு டா அதை நீ தான்
வீண் பண்ற வேற கம்பெனி தேடி போ
இல்லைனா growth இருக்காதுனு நீ
தான் MD நல்லவரு கம்பெனி நல்ல
கம்பெனினு இங்கேயே
இருந்துட்ட.
இவனால் அதற்கு பதில்
ஏதும் சொல்ல முடியாமல் சரி மச்சி
எனக்கு டைம் ஆகுது நான் இதை
கொண்டு போய் கொடுத்தா தான்
அவ சமைக்க தொடங்குவா என்று
கூறி விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அருகில் இருக்கும் வீட்டிற்கு
இவனை அழைத்தால் இவன்
கூறுவதை கேட்டு வீட்டில் மேலும்
பல பிரச்சனைகளை எதிர் கொள்ள
வேண்டியிருக்கும்
என்பதை உணர்ந்து .
இவங்க சொன்னது எல்லாம் உண்மை தான் போல நாம
என்ன வேலை
செய்தாலும் அதுக்கு எந்த
உயர்வுமில்லை ஆனா போன வாரம்
சேர்ந்தவன் என் போஸ்ட் தான்
அவனுக்கு என்னை விட ஊதியம்
இரு மடங்கு .ஒன்னுமே தெரியாம
இருந்த மகேஷ் இந்த நிலைக்கு
வந்திருக்கும் போது நம்ம
திறமையும் அறிவையும் இத்தனை
நாள் இங்கே அடமானம்
வைத்து வீண் செய்து விட்டோமோ என்று மனம் வருந்தி கொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.
அதன்பின் இவனும் பல
நிறவனங்களில் வேலை தொடங்க
ஆரம்பித்தான் ஆனால் இவன்
வயதையும் இவன் தற்போதுள்ள
பதவியையும் காரணம் காட்டி
இவனுக்கு வேலை கிடைப்பதும்
மிக சிக்கலாகவே இருந்தது .

#பருவத்தேபயிர்செய் என்பதன்
பொருளை இப்போது தான் உணர்ந்தான் ஆனந்த்

எழுதியவர் : (9-Jun-21, 8:41 am)
சேர்த்தது : Mayon
பார்வை : 205

மேலே