அந்த அசிங்கமான பேரை வைக்காதடா
டேய் பேரா, உன்னோட மூத்த கொழந்தை பொண்ணு. அவுளுக்கு 'அல்பனா'-னு பேரு வச்சிருக்கிற. பாக்கறவங்க எல்லாம் "உங்க பேரன் சுரேசுக்கு புத்திகெட்டுப் போச்சா" ன்னு கேக்கறாங்க. ..'மெட்ராசு டு பாண்டிச்சேரி' ங்கிற படத்தில 'கல்பனா'ங்கிற நடிகை கதாநாயகி. அதுக்கப்பறம் 'கல்பனா'ங்கிற பேரு பிரலமான பேரா ஆச்சு. எம் பேருதான் உனக்கு தெரியுமே.
@@@@@@
உம் எஞ் செல்ல 'கல்பனா' பாட்டி.
@@@@@@@@
என்னோட தோழிங்க எங்கிட்ட சொல்லறாங்க, "ஏன்டி கல்பனா உம் பேரனுக்கு அல்பத்தனம்டி. பெத்த பொண்ணுக்கு போயி 'அல்பனா'னு பேரு வச்சு அசிங்கப்படுத்தினே". இதுக்கு என்னடா சுரேசு சொல்லற?
@@@@@@@
அவுங்க கெடக்தறாங்க விடுங்க பாட்டிம்மா. உலகத் தமிழர்கள் யாரும் அவுங்க பெத்த பொண்ணுங்களுக்கு வைக்காத இந்திப் பேரு பாட்டிம்மா. அதுக்கு அழகான அர்த்தம் இருக்குது.
@@@@@@@@
என்ன அர்த்தம்டா பேரா?
@@@@@@@@@@
'அழகான'-னு அர்த்தம் பாட்டிம்மா.
@@@@@@@@
ஏன்டா முட்டாப் பயலே. 'அழகி' -னு பேரு வச்சா அது பேரு. 'அழகான' -ங்கிறது பேரா. அது பெயர்ச்சொல் இல்லடா சுரேசு. அதை ஆங்கிலத்தில் Adjective னு சொல்லுவாங்கடா. நீயெல்லாம் என்னத்தப் படிச்சுக் கிழிச்சயோ. 'அழகான ஓவியம், அழகான பெண்' . இப்படிச் சொன்னாத்தான் அதுக்கு அர்த்தம்.
@@@@@@@#
என்ன செய்யறது பாட்டிம்மா. இந்தில நெறையப் பேருங்க Adjectiveவாத்தான் இருக்குது.
@@@@@@
என்ன செய்யறது. இந்த சினிமாச் சனியன் வந்ததுக்கப்பறம்தான்டா தமிழ் மக்கள் அர்த்தம் தெரியாத இந்திப் பேரை எல்லாம் வச்சுக்கறாங்க. சரி உன் மனைவி போன வாரம் ஆண் கொழந்தை பெத்தாளே. அந்தக் கொழந்தை பொறந்ததுதே அதுக்கு என்ன பேரு வச்சு நகரசபையிலே பதிவு பண்ணிருக்கீங்க.
@@@@@@@
வச்சுட்டோம் பாட்டிம்மா. எங்க பையன், அதாவது உங்க கொள்ளுப் பேரன் பேரு 'வினோத்'.
@@@@@@@
டேய் அந்தப் பேரை ஏன்டா வச்சீங்க?
@@@@@@
அது அழகான இந்திப் பேருங்க பாட்டிம்மா. நல்ல அர்த்தம் எல்லாம் இருக்குதுங்க பாட்டிம்மா.
@@@@@@@@@@
என்ன கன்றாவியோ. அந்தப் பேரு ரொம்ப அசிங்கமான பேருடா சுரேசு. நம்ம தமிழ் முறைப்படி அந்தப் பேரைச் சொல்லிக் கூப்புட்டா நம்ம ஊரு மக்கள் காறித் துப்புவாங்கடா.
@@@@@@@
ஏன்? எதுக்கு?
@@@@@@@
அதையெல்லாம் நான் வெளிப்படையாச் சொல்லமுடியாது. நீயே நல்லாச் சிந்திச்சு நாஞ் சொல்லறதில இருக்கிற உண்மையைப் புரிஞ்சுக்கவே.
@@@@@@@@
சரிங்க பாட்டிம்மா. நீங்க சொன்னாச் சரியாத்தான் இருக்கும். நான் ஒரு வழக்குரைப் பாத்துப் பேசி பையனுக்கு நீங்க சொல்லற நல்ல தமிழ்ப் பேரா மாத்தி வச்சிடலாம்.
@@@@@@@@@
சரிடா தங்கம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Alpana = beautiful, decorative டிசைன்
Vinod = pleasing, full of joy, happy