364

14.6.2021

இறைவனுக்கு அர்ச்சனை செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு ... (இதில் ஆண், பெண், திருநங்கை, திருநம்பி அனைவரும் அடங்குவர்)

உள்ளார்ந்த பக்தியும். தூய இதயமும் , நற் சிந்தனையும் தவிர வேறு எந்தத் தகுதிகளும் இதற்குத் தேவையில்லை.....

வழிபடுமுறைக்கும் எந்த சட்டதிட்டங்களும் கட்டுப்பாடுகளும் , தனிப்பட்ட மொழியும் அவசியமே இல்லை....

கண்ணப்ப நாயனார் ஒரு வேடுவர்....
அவர் இறைவனுக்கு
அபிஷேக நீரை வாயிலும்
அர்ச்சனை மலர்களை தன் தலையிலும் சூடி எடுத்துச் சென்றாரே... இறைவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லையா?
இறைவனுக்கு தான் எச்சிலிட்டு சுவைத்துப் பார்த்த மாமிசத்தைப் படைத்தாரே... இறைவன் அதை ஏற்றுக் கொள்ளவில்லையா..?

வழிபாடு என்பது ஒரு தனிமனிதருக்கும் இறைவனுக்கும் இடையே நடக்கும் ஆத்மார்த்தமான உரையாடல் ...

வழிபாட்டு விதிகள் அனைத்தும்
மனிதர்களை பிரிக்க திணிக்கப்பட்ட சதிகளே...

எழுதியவர் : வை.அமுதா (16-Jun-21, 9:38 am)
பார்வை : 34

மேலே