இல்லை என்பதின் எல்லை
பாடுபடுகின்ற பாட்டாளிகள் எல்லாருமே செழுமையுடன் வாழ்வதில்லை!
கூடுகின்ற கூட்டாளிகள் எல்லொருமே எப்போதும் கூடி வாழ்வதில்லை!
ஏர்முனை ஏந்தும் விவசாயிகள் அனைவரும் நல்ல திருப்புமுனையைக் காண்பதில்லை!
குதிரைவண்டி ஒட்டும் பல வண்டிக்காரர்கள் குதிரைப் பந்தயத்தில் ஜெயிப்பதில்லை!
மாணவரை மாணிக்கமாக்கும் பல ஆசிரியர்கள் வைரமாக ஜொலிப்பதில்லை!
பிரபல நடிகர்களை அறிமுகப் படுத்தும் பல இயக்குனர்கள் பிரபலம் ஆவதில்லை!
போற்றத் தகுந்த மகனை, மகளைத் தரும் பெற்றோர்கள் பலர் போற்றப்படுவதில்லை!
ஏராளமான மக்களை ஏணியில் ஏற்றிவிட்ட பலர்க்கு ஏறிச் செல்ல ஏணி இருப்பதில்லை!
விளம்பரமில்லாமல் தர்மம் செய்யும் பலர்க்கு இறுதி காலத்தில் நிதி கிடைப்பதில்லை!
வன்முறையை வன்மையாக கண்டிக்கும் பலருக்கு நியாயமே கிடைப்பதில்லை!
இதைப் போலவே அநியாயம், கொடுமை, அக்கிரமங்கள், அராஜகம் செய்யும் மனிதர்கள் நிம்மதியுடன் வாழ்வதும் இல்லை!
ஆனந்த ராம்