போதைகள் பலவிதம்

*"போதைகள் பலவிதம்* "

(காய் மா காய் தேமா
...காய் மா காய் தேமா)

1.

துடிக்குமவள் கண்ணோ
தொடுக்குமது போதை !
....துடித்தமனம் பார்த்து
துளிர்க்குமது போதை !


பிடிக்குள்ளே பெண்ணால்
பீடிக்கும் போதை !
... பிடித்தபின்னே முத்தம்
பெற்றபோதும் போதை !


அடிவைக்கும் மழலை
அடிதந்தால் போதை !
...அடுத்துவரும் சிணுங்கல்
அனைவருக்கும் போதை !


மடிதுயிலும் பிஞ்சின்
மைக்கண்ணோ போதை !
... மறுகணமே விழித்தால்
மயக்குமது போதை !

2.

அடித்துகட்டி வந்த
ஆடுதுறை நெல்லும்
... அடுப்பிலிட்டு கஞ்சாய்
அருந்துவதும் போதை !

அடித்தொண்டை வற்ற
ஆய்ந்தெடுக்கும் பாடம்
...அவைசிலிர்ப்பைப் பார்த்தால்
ஆசிரியர் போதை !


மடிக்கணினி வைத்து
மனங்குளிர்தல் போதை !
... மறைவிஷயம் அறிய
மறைந்தொளிதல் போதை !


அடிமட்டத் தொண்டன்
அரசனுக்குப் போதை !
...அடிமைகளாய் என்றும்
அமைந்துவிட்டால் போதை !

3.

அடிபிறழா தெழுதல்
அவனுக்குப் போதை !
... அதிகமதிப் பெண்ணோ
அப்பனுக்குப் போதை !


கொடியிடை யழகி
குமரனுக்குப் போதை !
... கொழுத்தஎடை பொன்னைக்
கொண்டுவந்தால் போதை !


படிப்பில்லா பெண்ணோ
பழகியதால் வந்தால்
... பாசமிகு பந்தம்
பார்ப்பதுதான் போதை !


விடியுமது நேரம்
வெளுக்கும்கீழ் பாதை !
... விடிந்தபின்னே பார்த்தால்
விளையுமிடம் போதை !.


( *எண்சீர்க் கழிநெடிலடி* *ஆசிரிய விருத்தம்)*


மரு.ப.ஆதம் சேக் அலி.

எழுதியவர் : PASALI (25-Jun-21, 11:56 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 73

மேலே