சிறிதானாலும் சாதியுங்கள்
இனிய தமிழ் ரசிக்கும் மக்களுக்கு வணக்கம்
நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவை ஊக்கம்
எவருக்குத் தான் இல்லை, ஏதோ ஒரு ஏக்கம்
நம் செய்கைகள்,முந்தைவினையின் தாக்கம்
இனிய வாழ்வுக்குத் தேவை, பரந்த நோக்கம்
உறுதியாக இயங்க முக்கியத் தேவை ஆக்கம்
முயற்சி கூடினால் குறையும் கவலை தேக்கம்
பணிவிருப்பின் இல்லை, நான் என்கிற வீக்கம்
பிறர்க்கு உதவிடில், மனமாகும் தேனம்பாக்கம்
சிறிதானாலும் சாதியுங்கள், நீங்கள் வெல்கம்!!
ஆனந்த ராம்