பந்தி மந்தி

என் மனைவி மாணவிக்கு
முதல் மகப்பேறிலேயே
இரண்டு பெண் குழந்தைகள்
தேவதைகள் போல் அழகு!

என் பெயர் மாமன்னன்
பெற்றோர் சூட்டிய பெயர்
அவள் பெயர் மாணவி
அழகான இந்திப் பெயர்.

தற்கால தமிழர் நாகரிகப்படி
நாங்கள் பெற்ற
அருமைச் செல்வங்களுக்கு
தேடிப் பெற்றோம் நற்பெயர்கள்.

ஒரு குழந்தையின் பெயர் பந்தி
இன்னொரு குழந்தை மந்தி
கேலி கிண்டலுக்கு
உரிய பெயர்கள் அல்ல.

கடவுள் பெயரும்
சிந்தனைக்குரிய பெயரையும்
எம் பிள்ளைகளுக்குச் சூட்டுவது
எவ்வகையிலும் தவறாகாது.

தமிழருக்கு இப்பெயர்கள் புதுமை
எங்களுக்கு இப்பெயர்கள் பெருமை
வாழ்த்துங்கள் தமிழர்களே
நாங்கள் பெற்ற செல்வங்களை

●●●●●●●●●●●
Panthi = Goddess Lakshmi
Manthi = Thoughtful

எழுதியவர் : மலர் (27-Jun-21, 7:19 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 39

மேலே