கண்மணி நீ அறியாது.......
கள்ளம் ஏதும் இல்லை என
நீ என்னை ஏற்றத்தினால்
பள்ளம் கொண்ட வாழ்கையிலும்
கஷ்டம் இல்லை என காற்றேன்
கண்மணி நீ அறியாது...
ஏழை நான் வாழ்வது
ஓலை குடிசை என்றாலும்
வாழை இலை வாட்டி
உனக்கு சோறு ஊட்டுவேன்
கண்மணி நீ அறியாது...
பட்டுத்துணி பருத்திதுணி என
நீ அணிய இவன் ஒட்டுத்துணி
காயும் வரை வீட்டில் ஒளிந்து இருந்தது
கண்மணி நீ அறியாது...
சொகுசான மெத்தையில்
சுகமான உறக்கம் உனக்கும்
பதமான மண்ணில் எங்கே உறக்கம் ?
இரக்கம் நீ அறியாது....