சொட்டு சொட்டாக சில நீர் துளிகள் 555

***சொட்டு சொட்டாக சில நீர் துளிகள் 555 ***


உயிரானவளே...


நீ தந்த
வலிகளை சுமக்க...

கையளவு என் இதயம்
போதவில்லை எனக்கு...

வற்றிய என் கண்களுக்குள்
நீர் துளிகளும் இல்லை...

ஈரம்
கலந்த தென்றல்...

என்னை தழுவி
செல்லும் போதெல்லாம்...

சொட்டு சொட்டாக
சில நீர் துளிகள்...

என் இதயத்தின்மீது...

தெரியாமல் செய்த
தவருக்கு மன்னிப்பு கேட்டும்...

நீ கொடுத்த
தண்டனை நம் பிரிவு...

நாம் எப்போதும்
சந்திக்கும் இடத்திற்கு...

நான் வந்து
ரொம்ப நேரம் ஆகிறது...

நீ மட்டும்
இன்னும் வரவில்லை...

மீண்டும் ஒருமுறை உன்னை
நான் காணவேண்டும்...

உடைந்த என் இதயத்தில்
சேர்த்து வைத்திருக்கிறேன்...

உன் அழகான
நினைவுகளை...

நேரில்
வந்து செல்லடி...

உன் நினைவுகள்
எனக்கு இனியும் வேண்டாம்.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (30-Jun-21, 9:29 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 2023

மேலே