உன்னால் வலியினம் ஒன்று 555

***உன்னால் வலியினம் ஒன்று 555 ***


என்னுயிரே...


கனவை
சுமக்கும் கண்கள்தான்...

வெள்ளமாக வரும்
கண்ணீரையும் சுமக்கிறது...

நீ கொடுத்த அன்பை
சுமக்கும் என் இதயம்தான்...

உன் பிரிவை
தாங்காமல் தவிக்குதடி...

நான்
தனிமைக்காக வாடியதில்லை...

துணையாக உன் நினைவுகள்
என்னில் இருக்கும்வரை...

நீயும் படித்திருப்பாய் வல்லினம்,
மெல்லினம்,இடையினம் என்று...

உன் பிரிவால் நான்
புதிதாய் படிக்கிறேன்...

உன்னால்
வலியினம் ஒன்று...

உன்னிடம் காதலை
சொல்ல தயங்கியவன்...

சொல்லாமலே
இருந்து இருக்கலாம்...

இன்று நான் வலிகளை
சுமந்து கொண்டு இருக்கிறேன்...

எல்லோருக்கும்
உதிக்கும் சூரியன்...

எனக்கு மட்டும்
இன்னும் உதிக்கவில்லை...

விடியல் என்று ஒன்று
எப்போது என் வாழ்வில்.....


***முதல் பூ பெ.மணி.....***

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (26-Jun-21, 9:32 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1096

புதிய படைப்புகள்

மேலே