ஒற்றை தேவதை
பள்ளிச் சோலை
பரிவூட்டும் காலை நேரம்
அழகு நடைபோடும்
சின்னஞ்சிறு ரோஜா பூ
தன் ரெட்டை ஜடையால்
கட்டி இழுத்த குட்டி மாயம்
எந்தன் காதல்
பரிவர்த்தனையில்
அவள் வைத்த
முதல் பாத அடி
பார்வையில்
ஓர் படுகொலை
பள்ளி அருகே நின்று
அவள் பார்வைக்காக
காத்திருக்கும்
அந்த நொடிகளில்
அவள் பகல் நிலவாய்
காட்சியளிப்பாள்
பளிச்சென்று
அவளருகே ஓர் சில நொடி
அதற்கே நான்
பல யுகத்தின் பலனதுவாய்
தவமிருந்தேன் - மனம்
துறந்த துறவியாய்
மாயமகள் அவளின்
மனங்கனிந்த
காதல் வார்த்தைகள்
மாங்கனியுள்ளே
தேன்துளியாய்
என் நினைவெல்லாம்
தித்தித்திடும்
நித்தம் ஒரு திருநாளாய்
அவளுடன் இருக்கும்
ஒற்றை நொடி பொழுதில்
இரவும் பகலும் என்பதே
தேவையில்லாமல் போகிறது
அழகு ஜீன்ஸ் அணிந்த
என் சின்னக்கிளியின்
சிரிப்பைக் காண - நான்
சிறப்பு வகுப்பிலும்
சிறகடித்து காத்திருப்பேன்
அவளோடு சில பயணங்கள்
அவை பள்ளி முதல் வீடு வரை
அது சிறு தூரமாக இருந்தாலும்
அதுவே என் வாழ்வின் மிகச் -
சிறந்த பயணம். என்றென்றிலும்
வானவில்லாய் வந்த
என் சுவாச பூங்காற்று - அழகு
வர்ணங்களை தந்துவிட்டு
கண்களை களவாடியதே
கடவுளின் கையெழுத்து
அவளது அன்புத் தூரளில்
நிறைந்து போன - என்
மனதும் நினைவும் - இன்று
அவள் வருகையொட்டி
உறைந்து நிற்கிறது
ஓர் பனிக்கட்டியைப் போல்
அவளது நினைவில் பிழைக்க
முயன்ற நாட்களெல்லாம்
மீண்டும் மீண்டும் மூழ்கத் -
தான் கற்றுக்கொண்டேன்
உள்ளம் என்னும் கோட்டையை
அவள் உடைத்து சென்ற பின்னும்
என் சுட்டி தேவதையின் - அந்த
குட்டி முகம் என் நெஞ்சில்
இன்பத்தை தூவிச் செல்கிறது
சிறு துன்பத்தோடு
சிரிப்போடு சில நிமிடம்
சினத்தோடு சில நிமிடம்
இன்றும் சிந்தித்துப் பார்க்கிறேன்
எங்கே ?
என் தேவதை என்று
--------×-------
தொடரும்....