தமிழ் கற்றேன்
தத்தித் தத்தி
தமிழ் படித்தேன்
இலக்கணம் கற்க ...
உன் பெயரை
எழுதும் போது ...
சீர் கேட்கிறாயே
நியாயமா?...
எதுகை எது?
எது தொடை?... என
அறிய முயன்றேன் ...
நீயோ
அசையை... மறுக்கிறாய்.
ஈரடியில்
உனை வடிக்க நினைத்தேன் ...
நீயோ ...
நாலடி தருகிறாய்
நியாயமா?